விஷால் நடிக்கும் துப்பறிவாளன் கதை என்ன? – மிஷ்கின் மினி பேட்டி!

நடிகர் சங்க செயலாளரு, தயாரிப்பளர் சங்கத் தலைவருமான விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடே ஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரெடியாகிக் கொண்டிருக்கிறது. .இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ரா மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோ மற்றும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.. கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சிதம்பரத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் குறித்து மிஷ்கின் கொஞ்சூண்டு சொன்ன போது, “துப்பறியும் நிபுணரான விஷாலுக்கு ஒரு வழக்கு வருகிறது. அதை அவர் துப்பறியும் போது ஏற்படும் சிக்கல்கள், கேள்விகள்தான் திரைக்கதை. அனைத்தையும் தீர்த்து வைக்க, விடைகள் தேடும் போது எதிர்பாராத திருப்பங்கள் என பரபரப்பான த்ரில்லர் பாணியில் இதனை இயக்கியுள்ளேன்.

மேலும், பணத்துக்காக மக்கள் என்ன கொடூரமான காரியங்கள் செய்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். வெறும் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிற படமாக மட்டும் இருக்காது. இதில் சண்டைக்காட்சிகள், எமோஷன் காட்சிகள், மனிதநேயக் காட்சிகள் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தான் இப்படம் இருக்கும்”என்று மிஷ்கின் சொன்னார்