விஷால் + லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி 2 தயாராகப் போகுது!

தற்போது, விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. இதில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. காரணம், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், ராஜ்கிரண், லால், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடவுள்ளார்.

மிக முக்கிய வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக சக்தி பணியாற்றவுள்ளாராம். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்.. இந்த ’சண்டக்கோழி-2’ படத்துக்காக பிரமாண்ட செட் ஒன்றை உருவாக்கி வருவதாக இயக்குனர் லிங்குசாமி கூறினார்.

மேலும் இதுபற்றி லிங்குசாமி கூறும்போது, ’படத்துக்காக பிரமாண்ட செட் உருவாக்கப்படுகிறது. திருவிழா காட்சிக்கான செட் அது. அதில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகும்’ என்றார்.