நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள்! –  சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் விஷால் பேச்சு!

நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள்! – சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் விஷால் பேச்சு!

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில் 22.05.2018 அன்று மாலை ஆறுமணிக்கு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்தது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான புரட்சி தளபதி, அயன் மேன் விஷால் அவர்கள் அட்டை வழங்கும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் . சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் தெளிவான நீரோட்டத்தமிழில் வரவேற்புரை வழங்கினார். தலைவர் டி .ஆர் .பாலேஷ்வர், துணைத்தலைவர் டி.ஆர்.ராம் பிரசாத் என்கிற பிரபு, பொருளாளர் மதி ஒளி குமார், இணைச் செயலாளர் ம.அண்ணாதுரை, கவுரவ ஆலோசகர்கள் நெல்லை சுந்தர்ராஜன், மேஜர் தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு ஒளிர்வண்ண போர்த்துதல் ஆடை அணிவித்து வரவேற்றனர் .முதல் அடையாள அட்டையை மூத்த பத்திரிகையாளர் நெல்லைபாரதிக்கு வழங்கிய விஷால், உதடுகளில் தேங்கிய புன்னகையும், முகத்தில் தவழ்ந்த பெருமிதமும் மாறாமல், கடைசி உறுப்பினர் வரைக்கும் கனிவோடு வழங்கி, சங்கத்துக்கு பெருமை…
Read More
நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன்! – விஷால்

நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன்! – விஷால்

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பேசும்போது, ‘இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் காலேஜ், பள்ளி விழாவிற்கு செல்கிறேன். அங்கு எல்லாம், சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது வசனம் பேசுவது என்று எல்லாரும் சினிமா நோக்கி போய் கொண்டு…
Read More
இரும்புத்திரை ரிலீஸின்போதுதான் பணத்தை அருமையை உணர்ந்தேன்! – விஷால் பேச்சு

இரும்புத்திரை ரிலீஸின்போதுதான் பணத்தை அருமையை உணர்ந்தேன்! – விஷால் பேச்சு

கோலிவுட்டில் ஒற்றை ஆளாய் அதகளம் செய்து கொண்டிருக்கும்  விஷாலுக்கு சொந்தமான சொந் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத் திரை “ ... இதில் விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் , கலை இயக்குனர் உமேஷ் , நடிகர் காளி  வெங்கட் , ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ் , பொன் பார்த்திபன் , காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார். விழாவில் விஷால் பேசியது :-        இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு…
Read More
விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்யுது ஒரு மாஃபியா கும்பல்!

விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்யுது ஒரு மாஃபியா கும்பல்!

காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலையும்.. அந்த நதியே காஞ்சி போயிட்டா.. என்ற டயலாக்கின் நிகழ்கால வடிவமாகி விட்டார் விஷால். ஆம்.. நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் வரும் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாக தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் தியேட்டர்கள் உறுதி செய்யப்படவில்லையாம். விநியோகஸ்தர் அருள்பதி தமிழ்த் திரைப்பட துறையில் பலம் வாய்ந்த சென்னை, செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அவருடைய உத்தரவின் பேரில்தான் ‘இரும்புத் திரை’ படத்திற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் புகார் கூறியுள்ளார். இது பற்றி இன்று மதியம் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில்…
Read More
கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறும் பொருட்டு சென்னை கோட்டையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த , முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளதையடுத்து  இதர பணிகள் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தகவல் வருகிறது.. கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் டிஜிட்டல்கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல்தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல சினிமா தொழிலாளர்கள் வேலைஇழந்து பணக்கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பட படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் உள்ளனர். இந்த பிரச்சனையைதமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என…
Read More
நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்ததை ஏன் வாபஸ் பெறுகிறேன்? – பொன்வண்ணன் விளக்கம்

நடிகர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்ததை ஏன் வாபஸ் பெறுகிறேன்? – பொன்வண்ணன் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த பொன்வண்ணன், தன்னுடைய பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ‘நடிகர் சங்கத்தில் பதவி ஏற்கும்போது, பல கட்சியைச் சார்ந்தவர்கள் சங்கத்தில் இருப்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம். ஆனால், விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், எனக்குப் பிடிக்காததால் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால், அதற்குப் பதில் அளிக்க விரும்பாமலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில், பொன்வண்ணனின் கருத்துக்கு மதிப்பளித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தன்னுடைய நிலைப்பாடு பற்றி விளக்கினார் விஷால். மேலும்,…
Read More
உதவி கேட்க / உதவி செய்ய ஒரு புது ஆப்! – இது ஒரு விஷால் தயாரிப்பு

உதவி கேட்க / உதவி செய்ய ஒரு புது ஆப்! – இது ஒரு விஷால் தயாரிப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான் விஷால் ஏற்கனவே நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவி செய்து வருகிறார் என்பது சகல்ருக்கும் தெரிந்த செய்திதான். இந்த நிலையில் அவரும் அவருடைய நண்பர்களும் இணைந்து 'V Shall' என்ற அப்ளிகேசனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேசன் எதர்கு தெரியுமோ? உதவி தேவைப்படும் மற்றும் உதவும் குணம் சகலரையும் ஒன்று சேர்க்கும் வகையில் இந்த ஆப் உருவாகிறதாம். இந்த அப்ளிகேசன் மூலம் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களும், உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவவோ, உதவி பெறவோ செய்யலாம். இந்த அப்ளிகேசன் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது மேலும் இந்த ஆப் குறித்து விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். பொதுவாகவே ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பார்ப்பது அல்லது செல்ஃபி எடுக்க பயன்படுத்துவோம். ஆனால், அதைத் தாண்டி ஸ்மார்ட்…
Read More
வைகோ தயாரிப்பாளர் ஆனார்!

வைகோ தயாரிப்பாளர் ஆனார்!

வேலுநாச்சியார்' மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த நாடகத்தை கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ மிக பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.'வேலுநாச்சியார்' வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் என்றார் வைகோ. இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: தமிழர்களின் உயிர்க்காவியமான இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்த்தமைக்காத எங்களை பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்தது. அவர்களின் ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்ற வரலாற்றை திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மாவின் அருமை திருமகனார் சிரிகாந்தசர்மாவை ஆறரை ஆண்டுக்கு…
Read More
யோவ். டி..ஆரூ? நீ யாருய்யா அந்த பொண்ணை  அவமரியாதை செய்ய?  விஷால் கோபம்!

யோவ். டி..ஆரூ? நீ யாருய்யா அந்த பொண்ணை அவமரியாதை செய்ய? விஷால் கோபம்!

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே... நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி…
Read More