31
May
வாய்தா விமர்சனம் : நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் மற்றும் பலர்
எழுத்து &; இயக்கம்: மதிவர்மன்
இசை: லோகேஸ்வரன்
ஒளிப்பதிவு: சேது முருகவேல்
படத்தொகுப்பு: நரேஷ் குணசீலன்
தயாரிப்பு: கே வினோத் குமார் கதைக்களம்.. ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் ஒரு விபத்து நடக்கிறது. சாலை ஓரம் அயர்னிங் கடை போட்டு நடத்தி வருகிற பெரியவர் மு ராமசாமிக்கு அடி படுகிறது. இதை சுற்றி மேல் ஜாதிக்காரர் இருவர் கோர்ட் வழக்கு வரை சென்று சண்டையிடுகிறார்கள் இதில் அந்த எளியவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதே கதை. ஒரு சிறு பைக் விபத்து அதை சுற்றி சுழலும் கதை அதில் நம் சமூக அமைப்பையும், ஏழை மக்களின் வாழ்வியலையும், கோர்ட் நடவடிக்கைகளையும் தத் ரூபமாக எடுத்துள்ளார்கள். பைக் பெரியவர் மீது மோதிவிட்டு பைக்காரன் பயத்தில் ஓடிவிடுகிறான். இதனால் பெரியவரின் பையன் வண்டியை தன் வீட்டுக்குள் எடுத்து வைத்து பூட்டி விடுகிறான். பைக்காரன்…