நடிகர் டி ராஜேந்தரின் கார் மோதி உயிரிழந்த ஒருவர்

நடிகர் டி ராஜேந்தரின் கார் மோதி உயிரிழந்த ஒருவர்

சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி ஒருவர் நடிகர் டி ராஜேந்தரின் கார் மோதி உயிரிழந்த சிசிடிவி புட்டேஜ் வெளியான நிலையில் இது தொடர்பாக டி ஆரின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே காவலாளி மீது கடந்த வெள்ளிக்கிழமை கார் ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் டி.ராஜேந்தருக்கு சொந்தமானது என்றும் விபத்தை ஏற்படுத்தியது அவரது ஓட்டுநர் செல்வம் என்றும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது டி ராஜேந்தர் குடும்பத்துடன் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.   மேலும் விபத்து நடந்தவுடன் நடிகர் டி ராஜேந்தர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அந்த நபருக்கான மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளை செய்தார் என்றும் கார் ஓட்டுனரும் உடனடியாக…
Read More
சினிமா ஏழை பணக்காரன் யாரையும் பார்க்காது – எஸ் ஜே சூர்யா

சினிமா ஏழை பணக்காரன் யாரையும் பார்க்காது – எஸ் ஜே சூர்யா

மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.  ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.  கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.  இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.   இவ்விழாவினில்…   எஸ் ஜே சூர்யா பேசியதாவது… ‘அஷ்டகர்மா’ விஜய் அவர்கள் நல்ல கதை செய்து அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள். கிஷன் செல்வாக்கு மிகுந்தவர்,  அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தன் லட்சியம்…
Read More
VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓய்வில்லை – ராதாகிருஷ்ணன்!

VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓய்வில்லை – ராதாகிருஷ்ணன்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியும்போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி என நான்கு அணிகள் போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்" தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணிக்கும்-தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணிக்கு இடையில் மட்டுமே போட்டி என்கிற சூழல் நிலவி வருகிறது. ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது நேற்றைய (11.11.2020) அன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த T.  ராஜேந்தர் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது போல் பேசினார். செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் கூறுவதை தவிர்த்து வழக்கமான எதுகை மோனை வார்த்தை ஜாலங்களை கையாண்டார்.  VPF க்கு எதிராக முதல் குரல் கொடுத்தது நான் தான்…
Read More
ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” – ஷூட்டிங் ஓவர்!

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” – ஷூட்டிங் ஓவர்!

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்த்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும் போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்ததில், படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது.... இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்தில் இருந்து, நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடுமபத்தை சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டு சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். மடிந்து போன ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன். இன்னொரு புறம் கொரோனா…
Read More