மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”. ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார்.
உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில்…
எஸ் ஜே சூர்யா பேசியதாவது…
‘அஷ்டகர்மா’ விஜய் அவர்கள் நல்ல கதை செய்து அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள். கிஷன் செல்வாக்கு மிகுந்தவர், அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தன் லட்சியம் ஒன்றை நோக்கி ஆசைப்பட்டு பயணித்துள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துள்ளார். சினிமா ஏழை பணக்காரன் யாரையும் பார்க்காது பஸ் கண்டக்டரை சூப்பர் ஸ்டாராக மாற்றும். அந்த வகையில் உண்மையாக உழைக்கும் கிஷன் மிகப்பெரிய நடிகராக வர வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
பல்லாண்டுகளாக சினிமா வாழ காரணம் ஜெயின் குடும்பம் தான். ஒரு தயாரிப்பாளர் பணம் கொண்டு வந்தால் தான் படமே நடக்கும், அப்படிபட்ட தயாரிப்பாளர்களே பைனான்ஸியர் இடம் தான் நிற்பார்கள், அவர்கள் தான் பல தயாரிப்பாளரை தாங்கிப்பிடித்தார்கள். தமிழர்கள் பேசுவதை விட சுத்தமாக தமிழ் பேசுவார்கள், எங்கள் சொந்தத்திலிருந்து வரும் கிஷனை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம். சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்கள் 10 லட்சம் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு தந்தார். இந்த குடும்பம் ஜெயிக்க வேண்டும் தமிழ் சினிமாவை வாழவைக்கும் குடும்பம் அதிலிருந்து வரும் கிஷன் ஜெயிப்பார். கிஷனிடம் ஹீரோவுக்கு உண்டான அத்தனை அம்சமும் நன்றாக இருக்கிறது. விஜய் தமிழ்செல்வன் பெயரில் அதிர்ஷ்டம் இருக்கிறது. அவர் நன்றாக படத்தை இயக்கியுள்ளார். கிஷன் நல்ல ஹீரோவாக வருவார் அதில் நம் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பார்.
இயக்குநர் டி ஆர் ராஜேந்தர் பேசியதாவது…
நான் ஏன் இந்தப்படத்திற்கு வந்தேன், நான் ஏன் திரையுலகிற்கு வந்தேன் எல்லாவற்றிற்கும் காரணம் உள்ளது. கிஷனுக்கும், மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு வாழ்த்துக்கள். ஒலி நாடா வெளியீட்டு விழாவிற்கு செல்வதில்லை என முடிவெடுத்து இருந்தேன். என்னை பாட வைத்தீர்கள் என்னை எழுத வைத்தீர்கள் எழுதினேன். என் வாழ்வில் வசந்தத்தை தந்தவர் ஜெயின், அந்த குடும்பத்திற்காக தான் நான் பணியாற்றினேன். நம் முதலாளி வீட்டு பங்சன் போகலாம் என தான் வந்தேன். இங்கு வந்தவர்கள் அனைவரும் என்னை விட சிறப்பாக பேசிவிட்டார்கள். ஒரு வசந்த கீதம் படத்தில் சிலம்பரசனை நடிக்க வைத்தது இந்த குடும்பம் தான். அவர்கள் குடும்பத்து பையன் கிஷன் பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
தொழில்நுட்ப குழு
தயாரிப்பு – மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்
கதை-எழுத்து-இயக்கம் – விஜய் தமிழ்செல்வன்
ஒளிப்பதிவு – R. b. குரு தேவ்
கலை – கிஷோர்
இசை – L. v. முத்து கணேஷ்
பட தொகுப்பு – மணி குமரன்
நிர்வாக தயாரிப்பு – பினு ராம்
சவுண்ட் மிக்ஸர் – A.M ரஹமத்துல்லா
தயாரிப்பு மேற்பார்வை – A. m. a மாலிக்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)