சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி ஒருவர் நடிகர் டி ராஜேந்தரின் கார் மோதி உயிரிழந்த சிசிடிவி புட்டேஜ் வெளியான நிலையில் இது தொடர்பாக டி ஆரின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே காவலாளி மீது கடந்த வெள்ளிக்கிழமை கார் ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் டி.ராஜேந்தருக்கு சொந்தமானது என்றும் விபத்தை ஏற்படுத்தியது அவரது ஓட்டுநர் செல்வம் என்றும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது டி ராஜேந்தர் குடும்பத்துடன் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் விபத்து நடந்தவுடன் நடிகர் டி ராஜேந்தர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அந்த நபருக்கான மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளை செய்தார் என்றும் கார் ஓட்டுனரும் உடனடியாக சரணடைந்ததாகவும் தற்போது எக்ஸ்ட்ரா சேதியை பரப்புகிறார்கள்