‘கபடதாரி’ -டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது!

‘கபடதாரி’ -டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார். திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கபடதாரி’ படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘கபடதாரி’ தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை…
Read More
டெக்னாலஜியால் நிகழும் சமூக விரோத செயல்களை வெளிப்படுத்த வரும் ‘கீ ‘ டீசர்!

டெக்னாலஜியால் நிகழும் சமூக விரோத செயல்களை வெளிப்படுத்த வரும் ‘கீ ‘ டீசர்!

நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வழங்கியது. இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது. கம்ப்யூட்டர் ஹேக்கிங்கை மையமாக வைத்து உருவாகிவரும் '#கீ' படம் குறித்து Actor…
Read More
1 மில்லியன்  ரசிகர்களை கவர்ந்த ஜூலி என்ற லட்சுமிராய்!

1 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த ஜூலி என்ற லட்சுமிராய்!

தீபக் ஷிவதாசன் இயக்த்தில் பிரபல நடிகை ராய் லட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘ஜூலி-2’ படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இது 2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு சராசரி பெண் மிகப் பெரிய நடிகையாக உருவாக அவள் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படத்தின் கதை என ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார்.வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸரில் இடம்பெற்ற ராய் லட்சுமியின் கிளாமர் காட்சிகள் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அதோடு இதுவரை அந்த டீஸரை 1 மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்களுக்கு பார்த்து மயங்கியிருக்கிறார்கள் இந்த படம் அடுத்த மாதம் அக்டோபர் 6-ம் தேது வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=2VMjcw8V2KE
Read More