டெக்னாலஜியால் நிகழும் சமூக விரோத செயல்களை வெளிப்படுத்த வரும் ‘கீ ‘ டீசர்!

நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வழங்கியது. இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது.

கம்ப்யூட்டர் ஹேக்கிங்கை மையமாக வைத்து உருவாகிவரும் ‘#கீ’ படம் குறித்து Actor Jiiva , “ஒரு வருடத்துக்கு முன்பே இந்தக் கதையை நான் கேட்டிருந்தேன். இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி உருவாக்கும் பாதிப்புகளை மையப்படுத்திய சமூக அக்கறையுள்ள படம். ஒரு விஷயத்தில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் ஒவ்வொரு கருத்தும் நமக்கு எதிரானதாக மாறலாம்.

உதாரணத்துக்கு,என்னுடைய குழந்தையின் ஃபர்ஸ்ட் டே ஆஃப் ஸ்கூல் என்று அவன் படிக்கும் பள்ளி, மற்றும் அவனுடைய புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்கிறோம். அதன் மூலம் உங்களுடைய குழந்தை பற்றிய முழு விவரத்தையும் பிறர் அறிந்துகொள்ள முடியும். அதைக்கொண்டு யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஒருசிலர் குழந்தையைக் கடத்த கூட முயற்சிக்கலாம். இது போன்று பல விஷயங்களைக் கையாண்டுள்ளோம்.இப்போது பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டு போன்றவற்றைப் பற்றி கூறும் படம். டெக்னாலஜியால் நிகழும் சமூக விரோத செயல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படமாகவும் இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த படத்தின் டீசர் இதோ: