1 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த ஜூலி என்ற லட்சுமிராய்!

தீபக் ஷிவதாசன் இயக்த்தில் பிரபல நடிகை ராய் லட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘ஜூலி-2’ படத்தின் டீசர் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இது 2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒரு சராசரி பெண் மிகப் பெரிய நடிகையாக உருவாக அவள் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படத்தின் கதை என ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார்.வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸரில் இடம்பெற்ற ராய் லட்சுமியின் கிளாமர் காட்சிகள் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அதோடு இதுவரை அந்த டீஸரை 1 மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்களுக்கு பார்த்து மயங்கியிருக்கிறார்கள்

இந்த படம் அடுத்த மாதம் அக்டோபர் 6-ம் தேது வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.