எதிர்பார்ப்பது  எதிர்மறை வேடங்கள்தான்! :  ”தரமணி’ லிஸி ஆண்டனி

எதிர்பார்ப்பது எதிர்மறை வேடங்கள்தான்! : ”தரமணி’ லிஸி ஆண்டனி

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தரமணி' படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை .அவமதிப்பு , கண்டுகொள்ளாமை , வெறுமை ,சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். அப்பாத்திரத்தின் அடையாள மின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது. ஆனால் படத்தின் திருப்பமாக அதன் முடிவு இருக்கும். அதில் நடித்திருப்பவர் தான் நடிகை லிஸி ஆண்டனி. படத்தில் அப்படி மனப் புழுக்கம் கொண்டவராக நடித்துள்ள லிஸி நிஜத்தில் நேர் எதிர் .ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் படிப்பு , ஸ்டெல்லா மேரீஸில் பி.காம் . சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். என்று முடித்தவர் .படிப்பில் படு சுட்டி. சுயம் தேடும் சுதந்திரப் பறவை. ஷாப்பிங் போவது தான்…
Read More
‘தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் .

‘தரமணி’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் .

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை 'தரமணி' மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெருகி வரும் விமர்சனமும், கூடி வரும் ரசிகர்களும் தரும் ஆதரவை தொடர்ந்து 'தரமணி' படத்தின் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களின் ஏகோபித்த வரவேற்பும் பாராட்டும் இந்த படத்துக்கு வணிகரீதியான பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படத்தை நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.'' இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான…
Read More
திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

தமிழில் மிக முக்கியமான இரண்டு படங்களான ‘கற்றது தமிழ்’ மற்றும் ‘தங்கமீன்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராமின் 3வது படைப்பு தரமணி. முதல் படத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் நிலையும் அடுத்த படத்தில் இக்கால கல்வி முறையை பற்றியும் காட்டிய இயக்குநர் ராம், தரமணியில் உலகமயமாக்கலால் ஆண்-பெண் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். டீசர் முதல் விளம்பரம் வரை அனைத்தும் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ‘தரமணியின் வழியாக கீழடி வரை’, இயக்குநர் ராம் அளித்த பேட்டி சுருக்கமாக.. ஏன் ‘தரமணி’? வடசென்னை, தென் சென்னை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கு. தரமணிக்கு அந்த பக்கம் புதிய சென்னை ஒன்று இருக்கு. பன்முக கலாச்சாரம் மற்றும் பல மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி தரமணி.…
Read More
ஆணுக்கு ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பும் படம்!

ஆணுக்கு ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பும் படம்!

இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும். ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘தரமணி’ இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும். இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில் ,”`குழந்தைகளை மையமாக வைத்துப் படம் எடுத்த இயக்குநரிடமிருந்து ‘ஏ’ சான்றிதழ் படமா?. என்ன ஆச்சு இந்த இயக்குநர் ராமுக்கு?’ என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் ஆகவில்லை. சொல்லப் போனால், இந்த 10 ஆண்டுகளில் ராம் எனும் கலைஞன் அதிகமாக நெகிழ்ந்திருக்கிறான். பொதுப்புத்தியில் ‘ஏ’ படம் குறித்து என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் படம் ஆண்-பெண் உறவுச்சிக்கலைப்…
Read More