‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

  'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. "நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது" என்கிறார் இயக்குநர் தமிழ். 'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.…
Read More
இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக சாதித்த தமிழர் ராஜா சாண்டோ!

இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக சாதித்த தமிழர் ராஜா சாண்டோ!

பி. கே. ராஜா சாண்டோ ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்பகால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். அக்காலத்தில் திரைப்பட தயாரிப்பு களுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ் பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும் சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை "சாலா மதராஸி" என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு. மும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை…
Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படைப்பு  “SK 20” !

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்' அந்தஸ்தும், அதே நேரத்தில் நம் வீட்டு பையன் போன்ற தோற்றமும் அமைவது மிகவும் அரிது. அப்படிப்பட்ட தகுதியுடன் ஒருவர் வரும்போது உலகளவில் அனைத்து தரப்பினரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தவராக நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான “டாக்டர்” உலகளாவிய வகையில் ரசிகர்களின் மனதை வென்று, முழு வர்த்தக வட்டத்திற்கும் லாபகரமான படமாகவும் அமைந்து, அவரது நட்சத்திர அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “டான்” ஏற்கனவே வர்த்தக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, வர்த்தக வட்டத்தில் அப்படத்தை, இப்போதே…
Read More
டிக்கிலோனா –  சந்தானத்தின் ஆவரேஜ்  காமெடி!

டிக்கிலோனா – சந்தானத்தின் ஆவரேஜ் காமெடி!

இயக்கம் - கார்த்திக் யோகி நடிப்பு - சந்தானம், அனாகா, ஷ்ரின் காஞ்ச்வாலா, யோகிபாபு கதை கரு: ஹாக்கி கனவு கொண்ட மணி என்னும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு தனது கனவை தொடர முடியாமல், வெறுப்பான வாழ்கை வாழுகிறான். அவனுக்கு கால இயந்திரம் பற்றி தெரிந்தவுடன், கடந்த காலத்திற்கு சென்று தன் வாழ்கையை மாற்றலாம் என முடிவு செய்கிறான். அதன் பிறகு அவன் தேர்தெடுக்கும் வாழ்கை, அவனுக்கு இன்பம் தருகிறதா, துன்பம் தருகிறதா என்பதே கதை கால இயந்திரத்தை பற்றி வரும் படங்களின், கால இயந்திரத்தை பற்றிய அடிப்படை தகவல்களை கொடுத்துவிட்டு, அதன் பிறகு கதையின் ஊடே பயணிப்பது என்பது தான் அடிப்படை விதி. டிக்கிலோனாவில் அதிக சிரத்தை எடுத்துகொள்ளாமல், கதைக்கு கால இயந்திரத்தின் தேவை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தகவல்களை மட்டும் தெளிவாக கொடுத்தது சிறப்பான ஒன்று. கால இயந்திரம் படத்தில் இடம்பெற்றாலும், படம் அதனை சுற்றி அமையவில்லை. கதாநாயகன்,…
Read More
காசேதான் கடவுள் படத்தை ரீ மேக் செய்யப் போறாய்ங்களா? மூத்த தயாரிப்பாளர் அப்செட்!

காசேதான் கடவுள் படத்தை ரீ மேக் செய்யப் போறாய்ங்களா? மூத்த தயாரிப்பாளர் அப்செட்!

'காசேதான் கடவுளடா' திரைப்படம் ரீமேக் ஆகிறது என்றொரு செய்தி பரவுதே ..பார்த்தீர்களா?.. சில ஆண்டுகளுக்கு முன்னால் காசேதான் கடவுளடா 2, என்பது வெளியாகப் போகுது என்றும். இதனை பி.டி.செல்வகுமார் இயக்குகிறார் என்பதுடன் அதில் சிவகார்த்திகேயன், வடிவேல், சந்தானம், ஹன்ஷிகா, விஜய் சேதுபதி ஆகியோரெல்லாம் நடிக்க போறத ஒரு நியூஸ் வந்து பலராலும் மறந்தும் போயாச்சு. இப்ப புதுசா அதை ரீ மேக் செய்யப் போறதா ஒரு கிளம்பி இருக்காய்ங்க 70 -களின் தொடக்கத்தில் யூனிடி கிளப் ‘காசேதான் கடவுளடா’ என்ற நாடகத்தை சித்ராலாயா கோபுவின் கதை, வசனம், இயக்கத்தில் அரங்கேற்றி பெரும் வெற்றி கண்டது. திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் போதே நடிகர்கள் முத்துராமன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் யூனிடி கிளப்பின் நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தின் வெற்றிக்கு இவர்களின் பங்களிப்பு பெரிது. பின்னர் ஏவி.எம் நிறுவனம் இதனைத் திரைப்படமாகத் தயாரித்தபோது மேலே கூறப்பட்டுள்ள நடிகர்களுடன் தேங்காய் சீனிவாசன், லக்ஷ்மி ஆகியோரையும்…
Read More
‘தி மார்க்ஸ்மேன்’, -டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸ் ரிலீஸ்

‘தி மார்க்ஸ்மேன்’, -டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸ் ரிலீஸ்

ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது. கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார். செலிப்ரிட்டி ஃபிலிம் இண்டெர்நேஷ்னல் மற்றும் யூ எஃப் ஓ மூவிஸுடன் இணைந்து டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸ் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ பிப்ரவரி 26 அன்று இந்தியாவில் வெளியிடுகிறது. ராபர்ட் லோரென்ஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், பண்ணை உரிமையாளரான 60-வயது லியாம் நீசன், தாயை…
Read More
பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின் உதவியாளர் வள்ளுவன் டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  'ஓகே கூகுள்'  என்கிற  7  நிமிடக் குறும்படத்தை  இயக்கியுள்ளார். வள்ளுவன்  பிரபல  எடிட்டர்  லெனினிடம்  உதவியாளராக  இருந்து  எடிட்டிங் தொழில்நுட்பத்தையும்  பாலாவிடம்  உதவியாளராக  இருந்து  இயக்குநர்  பயிற்சியையும்  பெற்றவர். வள்ளுவனின் அண்ணன்   தியாகராஜன்  (நாடக கலைஞர் - திணை நிலவாசிகள்) 'தமிழ் ஸ்டுடியோ'வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்த னுக்கு ஒரு கண்காட்சி  நடத்தினார்கள். அப்போது  அவருக்கு உடல்நிலை சரியில்லா மல் போகவே  அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த  எடிட்டர் லெனின் இவரைப் பற்றி  விசாரிக்கவும்  மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு  அவரது  உதவியாளராகியிருக்கிறார். பின்னர் எடிட்டர்  கிஷோர்,  ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள்.  அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் . உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப்  போய்  பார்த்தபோது  தான்…
Read More
நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்!

‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கொம்பு வைச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் S.R.பிரபாகரன், தற்போது ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ஒரு புதிய படத்தைத் படத்தை தயாரித்து அதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்த ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். மேலும் நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோர் அறிமுகமாகுகிறார்கள். தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - S.R.பிரபாகரன். தயாரிப்பு நிறுவனம் - பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ். ஒளிப்பதிவு - கணேஷ்…
Read More