அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90 -வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார். விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர்  ​ மற்றும் கவிஞர் இன்பா ​ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அந்த காலத்தில்…
Read More
எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. இது குறித்து இயக்குநர் சஜோசுந்தர் விவரித்த போது ,” நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும்.…
Read More
சக்க போடு போடு ராஜா – டிரைலர்!

சக்க போடு போடு ராஜா – டிரைலர்!

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் சனிக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ளனர்.இந்தப் படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் ஜி. எல். சேதுராமன் இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா என்பவர் நடித்துள்ளார். முதல் முறையாக நகைச்சுவை நடிகர் விவேக், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் விடிவி கணேஷ், சம்பத் ராஜ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.  படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளாரக அறிமுகமாகிறார். இதையடுத்து படத்தின் இசை வெளியீடும் வரும் நவம்பர் 14-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.இதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். காமெடி நடிகராக கோலிவுட்டில் அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.அந்த வகையில், 'சக்க போடு போடு ராஜா' டிரெய்லரில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.…
Read More
நடிகர் சண்முக சுந்தரம் மரணம் – நடிகர் சங்கம் இரங்கல்

நடிகர் சண்முக சுந்தரம் மரணம் – நடிகர் சங்கம் இரங்கல்

மூத்த தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் (79) இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ". சண்முக சுந்தரம் அவர்கள் 1963-ம் ஆண்டு ரத்ன திலகம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர். 1972-ம் ஆண்டு வாழையடி வாழை படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட நூற்று கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அன்பானவன் அசறாதவன் அடங்காதவன் தான் கடைசியாக வெளிவந்த அவரது படம். மேலும் அண்ணாமலை, அரசியல்,செல்வி, வம்சம் ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர்…
Read More