சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி போச்சு!- ஏன்? சூர்யா விளக்கம்!

சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி போச்சு!- ஏன்? சூர்யா விளக்கம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனவே ஓடிடி அமேசானில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்து அக்டோபர் 30ல் ரிலீஸ் என அறிவித்தார் சூர்யா. சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சூர்யா தன் முடிவை மாற்றவில்லை. இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு என தெரிவித்து ரசிகர்களுக்கு விளக்க கடிதம் கொடுத்துள்ளார் சூர்யா. இதோ…
Read More
ஸ்பைடர் – அஜீத், விஜய் சூர்யா ரசிகர்கள் புறக்கணிப்பு ?

ஸ்பைடர் – அஜீத், விஜய் சூர்யா ரசிகர்கள் புறக்கணிப்பு ?

பிரசாத் தயாரிப்பில் நாளை ரீலீஸ் ஆக உள்ள படம் "ஸ்பைடர் "மகேஷ்பாபு, ராகுல் பிரித்தி சிங் ஜோடி நடித்துள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்ணனி இயக்குனர் முருகதாஸ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். தமிழகத்தில் அதிகமான தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள ஸ்பைடர் படத்தை தமிழ்நாடு, கர்னாடகாவில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ பக்சே பினாமி என்று சர்ச்சைக்குள்ளான இந்த லைக்கா நிறுவனம் தமிழ் திரைப்பட துறையில் தயாரிப்பு, விநியோகம் என இரு துறைகளிலும் வியாபாரம் செய்து வருகிறது. ஆனாலும் லைக்காதயாரித்து ரீலீஸ், மற்றும் விநியோகம் செய்த எந்த படமும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை. முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வெளியான கத்தி அசலை தேத்தவே கடுமையாக போராட வேண்டி இருந்தது. தற்போது லைக்காதமிழ் சினிமா வியாபாரத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முருகதாஸ் மூலம்…
Read More
“கூட்டத்தில் ஒருவன் ” படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

“கூட்டத்தில் ஒருவன் ” படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி

நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் `கூட்டத்தில் ஒருத்தன்' படத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது“ என்ற பாடலில் இணைந்திருக்கின்றனர். அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன். தா.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இத்திரைப்படத்தை வித்தியாசமான புரமோஷன் செய்யும் வகையில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு கிப்ட் பாக்ஸ் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ரியாக்ஷனை படம் பிடித்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டனர். 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் இசையமைத்து பாடியுள்ளார். சூர்யா, சிவகார்த்திகேயன், நாசர், சிவகுமார், ஆர்ஜே பாலாஜி, விஜய்சேதுபதி, ஆர்யா, விஷ்ணுவிஷால், ரம்யா நம்பீசன், சமுத்திரக்கனி, லிங்குசாமி ஆகியோர்களுக்கு கிப்ட் கொடுத்து அதை அவர்கள் பிரிக்கும்போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் சிலருக்கும் இந்த…
Read More