நடிகர் சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

  நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு ' ரெட்ரோ' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். லவ் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா,…
Read More
‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!

‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான 'சூர்யா 45' படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். அனைவரும் ரசிக்கும்படியான, காமெடி கலந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னராக, இப்படம் உருவாகவுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இன்றைய பூஜைக்குப் பிறகு, ஆர்ஜே பாலாஜி கோயம்புத்தூரில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இப்படப்பிடிப்பில், சூர்யா மற்றும் பிற முன்னணி நடிகர்கள் இடம்பெறும் முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். இப்பிரம்மாண்ட திரைப்படத்தை, தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரகாஷ்…
Read More
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளி வந்து இருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா ? 1000 வருடத்திற்கு முந்தைய காலம், நிகழ் காலம் என இரண்டு கால கட்டத்தில் நடக்கும் கதை. அறிவியல் ஆராய்ச்சி கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான் அவன் கோவாவில் பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை தேடி வருகிறான், அவனுக்கும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு எனும் போது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் கதை விரிகிறது. அந்த காலகட்டத்தில் சூர்யாவுக்கும் அந்த சிறுவனுக்கும் என்ன நடந்தது. அந்த சிறுவனை கொல்ல துரத்துபவர்கள் யார்? நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் அந்த சிறுவனை சூர்யா காப்பாற்றுகிறாரா ? என்பது தான் படம் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம். படம் விசுவல் டிரீட், கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் வரலாற்று காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. யாரும் தனி நடிகர்களாக…
Read More
தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. “எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சூரியாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசிகர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இதுவரை வெளியான டீசர், டிரெய்லர்களில் இரண்டு விதமான பாத்திரங்களில் சூர்யா தோற்றம் மிரட்டலாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாகவும் கலக்கும் சூர்யா என இரு கதாப்பாத்திரங்களில் தொன்றும் சூர்யா, திரையில் மேலும் பல விதமான கெட்டப்களில் தோன்றவுள்ளார். கதை, பிரம்மாண்டம், விஷுவலாக மட்டுமல்லாது, இது உண்மையில் சூர்யா ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும். இயக்குநர் சிவா அவரது குழுவுடன் இணைந்து, 3…
Read More
’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா !!

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா !!

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைவான பதட்டத்துடன் இருந்த படம் இதுதான். சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். முழுப்படமும் நேற்று இரவுதான் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்கள்தான். 10,500- 11,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு இந்தப்…
Read More
‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும் ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், நடிகர் சூர்யா நடிக்கும் 'சூர்யா 45' படத்தைப் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் பெயரிடப்படாத இந்தப் படம், தயாரிப்பு நிறுவனத்தின் புகழ்பெற்ற பட வரிசையில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகும் படமாக இருக்கும். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற நகைச்சுவை மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய படங்களை இயக்கிய, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையை உருவாக்கி வரும், இயக்குநர் RJ பாலாஜி தற்போது சூர்யா 45 படத்தின் முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பக்கா என்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான…
Read More
அனல் அரசு இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகிறார்!

அனல் அரசு இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகிறார்!

தன் மகன் சூர்யாவை ஹீரோவாக்க போகிறார் விஜய் சேதுபதி. சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தை இயக்கப் போவது வேறு யாருமில்லை பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு தான். இது தான் அனல் அரசு இயக்கும் முதல் படமாகும். நடிகர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்குநராவது புதிது அல்ல. இந்நிலையில் தான் அனல் அரசுவும் கேமராவுக்கு பின்னால் நிற்க முடிவு செய்திருக்கிறார். அவர் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் சூர்யாவை வைத்து ஆக்ஷன் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா விஜய் சேதுபதியின் பட ஷூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது. அந்த படத்தில் யார், யார் எல்லாம் நடக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யார் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் எங்களுக்கு விஜய் சேதுபதி ஒரு காட்சியிலாவது வந்துவிட்டு செல்ல வேண்டும் என மக்கள் செல்வனின் ரசிகர்கள் அனல் அரசுவுக்கு அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர். தன் மகன் சும்மா ஹீரோவாக வரக் கூடாது என்று சூர்யாவை ஏற்கனவே…
Read More
அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய…
Read More
மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யா

மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யா

கானாத்தூர் மக்களின் தூய்மை பணிகளுக்காக நவீன வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கிய சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம். சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டி குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மை பணிகளை எளிதாக கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சி தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் திரு. சிவகுமார் வழங்கினார். தமிழ் திரையுலகில் 'ஜெய் பீம்' போன்ற படைப்புகளை உருவாக்கி, சமூகத்தில் நேர் நிலையான அதிர்வுகளை, நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஏற்படுத்தியது. படைப்புகளுடன் மட்டும் நில்லாமல் சமூக நல பணிகளுக்காகவும், மக்கள் நல திட்டங்களுக்காகவும் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளித்து வருகிறது. அந்த வகையில் கானாத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தூய்மை பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, தூய்மை பணிகளுக்கான நவீன…
Read More
சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்

சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்

*சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்* சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார். DSPயின் பின்னணி இசையும் விஷுவலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட…
Read More