Latest Posts

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”

இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள...

விஜய்மில்டனின் ’கோலி சோடா’! – கொஞ்சம் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக்...

வெள்ளை யானை – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=HM-Gtzpx7ao&feature=youtu.be

விமர்சனங்களை அடக்கி வாசிங்க -கபடதாரி இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ் செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி...

மிகவும் மகிழ்ச்சி – சூரரைப் போற்று ரிலீஸ் குறித்து சூர்யா!

வாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று வெளியீட்டை முன்னிட்டு ஒரு விசேஷ போஸ்டருடன் சூர்யா தனது ரசிகர்களை கவுரவித்தார் ‘சிம்ப்ளி ஃப்ளை’ என்ற புத்தகத்தின் கற்பனை வடிவமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான சூரரை போற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகும் வேளையில், ஒரு விசேஷ போஸ்டரை சூர்யா மிக உயரமான இடத்திலிருந்து வெளியிட்டார்.

ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்திய மில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. இதை முன்னெடுத்துக் கொண்டு செல்லும் வகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்துக்காக தங்கள் அன்பையும் ஆதரவையும் பொழிந்த சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் அற்புதமான ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பொழுதுபோக்குத் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக கடல் மட்டத்தில் இருந்து 34000 அடி உயரத்தில் -62°C தட்பவெப்பத்தில் இந்த போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் சூர்யாவுடன் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட 58,000 கையெழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட 10,000 கையெழுத்துகள் விண்வெளியில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. தனது அன்பான ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் விசேஷ செய்தியுடன் கூடிய ஓரு தனித்துவமான வீடியோவை சூர்யா பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் ‘வெளியீட்டுக்கு முன்பாகவே இப்படத்துக்கு கிடைத்த அன்பை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை சாதிப்பது சாத்தியமே எனபதையும், வானம் கூட எல்லை இல்லை என்பதையும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் சூரரைப் போற்று திரைப்படமும் இந்த சமர்ப்பணமும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். படத்தின் வெளியீட்டையும், பார்வையாளர்களின் எதிர்வினைகளையும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்’ என்றார்.

ஒரு அச்சமற்ற புரட்சியாளரின் அசாதாரணமான சாதனைகளுக்கு சிறகுகளை அளிக்கும் இந்த உணர்ச்சி நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. சுதா கொங்காரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ப்ரேஷ் ராவல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் (2டி) மற்றும் குணீத் மோங்காவின் ஷிக்யா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். அமேசான் ப்ரைம் வீடியோவில் 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.\

Latest Posts

MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்”

இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள...

விஜய்மில்டனின் ’கோலி சோடா’! – கொஞ்சம் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக்...

வெள்ளை யானை – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=HM-Gtzpx7ao&feature=youtu.be

விமர்சனங்களை அடக்கி வாசிங்க -கபடதாரி இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யம்!

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ் செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி...

Don't Miss

தனுஷ் நடிக்கும் டி43 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விட்டது!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. டி43 என்றழைக்கப்படும் படம். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தனுஷின் 43 வது படம் என்பதால் டி43...

தைப் பூச பண்டிகை திருநாளில் ரிலீஸாகும் ‘கபடதாரி’!

கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கபடதாரி’. இந்தப் படத்தில் சிபிராஜ் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ்...

என் கேரக்டருக்காக டெய்லி ஒன்றரை மணி நேரம் மேக் அப்- கேஜிப் 2 குறித்து சஞ்சய்தத்!

வில்லன் பாத்திரம் பிடிக்கும் என்பதால் ஆதிரா ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட...

‘எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி!

ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'. இப் படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன்...

நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது: படத்தொகுப்பாளர் ஆண்டனி :இதே மாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்து...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.