நயந்தாராவை இயக்கும் சுந்தர் சி !!

நயந்தாராவை இயக்கும் சுந்தர் சி !!

  தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'அரண்மனை 4' படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது.. மேலும் ஐ வி…
Read More
அரண்மனை படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்!

அரண்மனை படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "அரண்மனை 4" திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு புதுமையான ஹாரர் பயணத்திற்கு அழைத்து சென்ற இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை குவித்து,…
Read More
சுந்தர் சி அரண்மனை 4  அசத்தியதா?

சுந்தர் சி அரண்மனை 4 அசத்தியதா?

குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் திரைக்கு வந்திருக்கிறது. குடும்பங்களை திருப்திப்படுத்தும் அளவு சிறப்பாக இருக்கிறதா ? இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, வி டிவி கணேஷ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்திருக்கிறது அரண்மனை 4.   சுந்தர் சி எப்போதெல்லாம் கொஞ்சம் சோர்ந்து போகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு அரண்மனை படம் எடுத்து ஜாலியாகி விடுவார். அவருக்கு மட்டுமல்ல படம் பார்ப்பவர்களுக்கும் அதே ஜாலியை இந்த படம் கடத்தி வந்தது, அதனால் தான் இந்த படம் 3 பாகங்களை கடந்து நான்காவது பாகமாக வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு செய்து வைத்த சட்டை போல ஒரு ஹாரர் படத்தில் காமெடி கிளாமர் கமர்சியல் எல்லாவற்றையும் கலந்து ஒரு விருந்து சாப்பாடை தயாரித்து வைத்திருந்தார் சுந்தர் சி. அரண்மனை படங்கள் அனைத்துமே கதை ஒன்றாக தான் இருக்கும், ஒரு அரண்மனை அங்கிருக்கும்…
Read More
என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை! ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர்.சி!

என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை! ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர்.சி!

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகை தமன்னா பேசியதாவது… சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள்…
Read More
“ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

“ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது. ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக் உறுதிப்படுத்துகிறது. ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில்…
Read More
சுந்தர்சி யின் வெற்றிப்படமான அரண்மனையின் நான்காவது பாகம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது!

சுந்தர்சி யின் வெற்றிப்படமான அரண்மனையின் நான்காவது பாகம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது!

  தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,  தற்போது…
Read More
அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர்.C நடிக்கும் “ஒன் 2 ஒன்” படத்தின் அப்டேட் !

அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர்.C நடிக்கும் “ஒன் 2 ஒன்” படத்தின் அப்டேட் !

  24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்". முழுக்கப்படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். மேலும் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் K.திருஞானம் அவருக்கு ஒரு புதிய IPhone பரிசளித்துள்ளார். திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C நாயகானாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி…
Read More
தலைநகரம் 2 பட வெற்றிக்கு நன்றி தெரிவித்த சுந்தர் சி! இப்படி ஒரு வரவேற்பா!

தலைநகரம் 2 பட வெற்றிக்கு நன்றி தெரிவித்த சுந்தர் சி! இப்படி ஒரு வரவேற்பா!

மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான்…
Read More
நடிகை குஷ்புவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது! coccyx bone பிரச்சனையால் அவதிப்படுகிறார்!

நடிகை குஷ்புவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது! coccyx bone பிரச்சனையால் அவதிப்படுகிறார்!

நடிகை குஷ்புவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். coccyx bone பிரச்னையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “மருத்துவர்களின் முறையான சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமாகும் என நான் நம்புகிறேன்” என பதிவிட்டு உள்ளார். அத்துடன் கையில் ட்ரீப்ஸ் ஏற்றியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், coccyx bone பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் அதே பிரச்னைக்காக இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
தலைநகரம் 2 முதல் பாகத்தை மிஞ்சியதா !!

தலைநகரம் 2 முதல் பாகத்தை மிஞ்சியதா !!

  இயக்கம் - Vz துரை நடிப்பு - சுந்தர் சி, பாலக் லல்வாணி, தம்பி ராமையா. தலைநகரம் முதல் பாகம் தான் சுந்தர் சியை ஹீரோவாக்கியது. வடிவேலு காமெடியுடன் இணைந்து ரௌடியின் வாழ்க்கையை கமர்ஷியலாக சொல்லி வெற்றி பெற்றது படம். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்போது அதன் இரண்டாம் பாகம். நேரடியாக எந்த தொடர்பும் இல்லாமல் புது கதையுடன் வந்துள்ளது இந்தப்படம். சிட்டிக்குள் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், ஹார்பரில் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், சினிமா துறையில் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், இவர்களுக்கு மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஒருவரை ஒருவர் அழிக்க நினைக்கிறார்கள். இவர்கள் பிரச்சனையில் ரௌடியிசம் வேண்டாமென ஒதுங்கி இருக்கும் ரைட் உள்ளே வர நேர்கிறது. பின் என்ன நடக்கிறது என்பதே படம். முதல் பாதி ஒவ்வொரு வில்லனுக்கும் ஒரு ப்ளாஷ்பேக், ரைட்டின் கதை அவர்கள் பிரச்சனையில் உள்ளே வருவது என திரைக்கதை பரபரக்கிறது, ஒவ்வொரு…
Read More