27
May
கூத்து, நாடகம், மேடை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சினிமா பக்கம் திரும்பிய காலம் அது. தெலுங்கு மற்றும் மலையாள பட உலகில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி பாசமலர் படத்திற்காக தங்கை கதாப் பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஜோடி யார் தெரியுமா? உண்மை வாழ்க்கையிலேயே இவருக்கு கணவராக அமைந்த ஜெமினி கணேசன்தான்..!ஆனால் இக்கதை இவர்களது காதல் பற்றி அல்ல. அண்ணன் தங்கை பாசத்தை பற்றி. சாவித்திரிக்கு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். “என் தங்கைதான் எனக்கு எல்லாம்..என் உலகமே அவதான்..” வசனம் இன்றளவும் பல படங்களில் ரெஃபரன்ஸாக உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இன்றைய நவீன யுகத்திலும் ‘வாராயென் தோழி... வாராயோ..’ பாடல், மணவிழா நிகழ்வுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ’பாசமலர் படம் பாத்திருக்கீங்களா’ என்று நெருங்கியவர்களிடம் கேட்டால், நம் மேல் அவர்கள் கொண்ட பாசமே பங்கமாகிப் போனாலும் ஆச்சரியமில்லை. சுள்ளென்று கோபமாகி விடுவார்கள்.…