செட் போடாமல் உண்மையான தளத்தில் நடக்கும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு!

செட் போடாமல் உண்மையான தளத்தில் நடக்கும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு!

  நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற அசலான இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் வழிகாட்டுதலின் கீழ் கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கிறார். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள், அனைத்து தடை கற்களையும் அகற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் படத்தின் முன் தயாரிப்பை தொடங்குவதற்கு ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள். 'NC23' படக்குழுவினர் ஆந்திராவின் கடலோரப் பகுதியை ஆய்வு செய்து, ஸ்ரீகாகுளத்தில் உள்ள கே. மச்சிலேசம் எனும் கிராமத்திற்கு சென்றனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் பன்னி வாஸ் பேசுகையில், '' இந்த படத்தின் கதையை ஹைதராபாத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யக்கூடாது என்பதில் இயக்குநர் உறுதியாகவும், ஆர்வமாகவும் இருந்தார். மக்கள் மற்றும் சூழலை ஆய்வு செய்து இந்த படத்தின் முன் தயாரிப்பை கவனத்துடன் முன்னெடுத்து வருகிறோம்''…
Read More
சமந்தா 200 கோடியை நிராகரித்தார்!

சமந்தா 200 கோடியை நிராகரித்தார்!

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் விவாகரத்து செய்ய போவதாக, கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து, சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே மனகசப்பு உருவாகி இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். பிரபலமான ஜோடியான நாகசைத்தன்யா-சமந்தா உடைய விவாகரத்து செய்தி பரபரப்பை கிளப்பி இருந்தது. முன்னரே இந்த தீர்மானத்தை எடுத்த, சமந்தா மற்றும் நாக சைத்தன்யா ஜோடி, இப்போது தான் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இந்த பிரிவை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழிலும் சில படங்களை கையில் வைத்துள்ளார். இந்த விவாகரத்து பற்றிய இதர தகவல்கள் வெளியாகி உள்ளது. கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்த சமந்தாவிற்கு, ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்க, நாக சைத்தன்யா குடும்பம் முன் வந்ததாகவும், அதனை சமந்தா வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Read More