ஜெயம் ரவியின் கமர்ஷியல் ஆட்டம் – சைரன் !!

ஜெயம் ரவியின் கமர்ஷியல் ஆட்டம் – சைரன் !!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கிற படம் சைரன். ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், ஒரு போலீஸ் சைரனுக்கும் இடையில் நடக்கிற போராட்டம் தான் படத்தோட மையம். ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிற ஜெயம் ரவி, அவரோட பொண்டாட்டிய கொலை பண்ணிட்டதா, வில்லன்களால் குற்றம் சுமத்தப்பட்டு, ஜெயிலுக்கு போறாரு. தன்னுடைய கைக்குழந்தையை விட்டுட்டு ஜெயில்ல பல காலமாக இருக்கிற அவர், வயசான காலத்துல பரோல்ல திரும்ப வர்றாரு. அப்ப, தன்னுடைய மனைவியோட கொலைக்கு காரணமான வில்லன்கள வேட்டையாட ஆரம்பிக்கிறார். அந்த ஏரியால இன்ஸ்பெக்டராக இருக்கிற கீர்த்தி சுரேஷ் இவரை தடுக்க போராடுறாங்க. இதுதான் படத்தோட கதை. தமிழ் சினிமால அடிச்சு துவச்சு போட்ட கதையினாலும், படத்தோட போரடிக்காத திரைக்கதையும். சரியான நடிகர்களை வைத்து, காமெடியை கொஞ்சம் கொஞ்சமா தூவி, ஒரு சரியான கமர்சியல் மசாலா…
Read More
“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

“சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார். தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். .…
Read More
500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க“தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு !

500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க“தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு !

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது ! நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது,…
Read More
கீர்த்தி சுரேஷு ஆரம்பித்த புதிய பிஸினஸ் !

கீர்த்தி சுரேஷு ஆரம்பித்த புதிய பிஸினஸ் !

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையான இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான இவர், தற்போது தமிழ், தெலுங்கில் என பலமொழிகளில் பிசியா நடிச்சு வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வரும் அவர், செல்வராகவனுடன் இணைந்து ‘சாணிக் காயிதம்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள கீர்த்தி சுரேஷ், டொவினோ கதாநாயனாக நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார். இதற்கிடையே திரைப்பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து, தங்களது வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், வீடியோ லிங்க் ஒன்றை இணைந்துள்ளார்.…
Read More
ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

இயக்கம்: சிவா நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜகபதிபாபு, இசை: டி. இமான் கதை - கிராமத்து ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். உயிருக்குயிரான தங்கை கீர்த்தி சுரேஷ். அவருக்கு ஊரெல்லாம் தேடி மாப்பிள்ளை பார்க்க்கிறார் ரஜினி.  அப்போதுதங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் வரும்பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. தமிழ் சினிமாவில் பாசமலர் காலத்திலிருந்து  அடித்து துவைத்த அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதைக்கு கொஞ்சம் புதுப்பெயிண்ட் அடித்து ரஜினி மசாலாவை பூசித் தந்திருக்கிறார்கள் ஆனால் காலம் மாறி பல காலமாகிவிட்டதை மறந்து விட்டார்கள். ஊர் பஞ்சாயத்து தலைவராக மக்கள் மவுசுடன் துள்ளலாக திரிகிறார் ரஜினி. படித்துவிட்டு ஊருக்கு வரும் கீர்த்திக்கு மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தான் பேசியே திருத்திய பிரகாஷ் ராஜ் பையனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார். ஆனால் கல்யாணத்திற்கு முதல் நாள் கீர்த்தியை காணவில்லை. தங்கையை மீது பாசமான அண்ணன் அவருக்கே…
Read More