10
Jun
கன்னட சினிமாவின் திறமை வாய்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சார்லி777 வாழ்கையின் மேல் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பவனுக்கு ஒரு நாய் துணையாய் வருகிறது. ஒரு நாள் அந்த நாயும் அவனைவிட்டு போக போகிறது என தெரிந்தபின் அவன் என்ன செய்கிறான் என்பதே கதை. படத்தின் முக்கிய அம்சமே நாயை மனிதன் உணர்வுகளுக்குள் பயணிக்க வைத்தது. படம் ஒரு காதல் கதையை பார்ப்பது போல தான் உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் கதையை எவ்வளவு ஆழமாக சென்று பார்போமோ அப்படி தான் இருக்கிறது இந்த கதை. நாயாக சார்லி நடித்துள்ளது. அது தான் படத்தின் தலைப்பும், அது சரியும் கூட. பொதுவாக விலங்குகளை வைத்து வரும் படங்களில் மனிதர்களின் கதையில் விலங்கு பயணிக்கும். ஆனால் இந்த படத்தில் சார்லியின் தேவையை நோக்கியே ஹீரோ ஓடுகிறான். படம் ஸ்லோவாக…