13
Jun
இப்ப ராஜ்யசபா எம்பியாகிப்புட்ட கமல்ஹாசனின் பிரம்மாண்ட வெற்றித் திரைப்படமான 'தசாவதாரம்' இதே ஜூன் 13, 2008 அன்று வெளியாச்சு. ஆஸ்கர் பிலிம்ஸ் ஈவிச்சந்திரன் புரொட்யூஸ் பண்ணிய அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுச்சு. அந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் அமைச்சிருந்தார் கமல். டைரக்டர் பொறுப்பை மட்டுமே கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருந்தார். அந்தப் படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள் குறிச்சு கே.எஸ்.ரவிகுமார்கிட்டே கேட்டச்சே ,' என் லைஃப்ஃபிலே அதிகமா டென்ஷனாகி ஒர்க் செஞ்ச படம் எதுன்னு கேட்டா அது 'தசாவதாரம்'தான். ஒவ்வொரு ஷெட்டியூலுமே ஒரு படம் எடுக்குற மாதிரிதான். அந்த ஷெட்டியூலில் என்ன கேரக்டர், அதற்கான மேக்கப் என அம்புட்டும் பிளான் பண்ணி சொல்லிவிடுவோம். கமல் சார் ஒரு நாளைக்கு ஒரு கேரக்டர் தான் பண்ணுவார். அடுத்த நாள் தான் அடுத்த கேரக்டர் பண்ணுவோம். ஒரு சீனில் நிறைய கமல் இருக்கும் போது, ஒரு கேரக்டர் எடுத்து முடிச்சுடுவோம். அடுத்த நாள் வேறு…
