“என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம்!- “கல்கி 2898 கிபி” பட நாயகர் பிரபாஸ்!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்காவிடம் “இது இயக்குநர் நாகியின் ஐடியாவா, அல்லது உங்கள் ஐடியாவா ? என்று கேட்டேன். அதற்கு தத் சகோதரிகள், “நாகி நம்மருகே இருக்கும் போது தனியாக யோசிக்க ஏதும் உள்ளதா என்ன? ” என்று பதிலளித்தனர் என்றார்.

தீபிகா படுகோன் பிரபாஸை போனில் அழைத்ததை குறிப்பிட்டு, “கமல் சாருடன் எங்கள் முதல் நாள் படப்பிடிப்பை முடித்த, சிறந்த அனுபவத்தை கூறவே அழைத்தேன்” என்று தெரிவித்தார். பிரபாஸ் கூறும்போது, “என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம் என்றார். படத்தின் கான்செப்ட் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “இந்தியா வித்தியாசமான களங்களுக்கு தயாராக உள்ளது, இக்கதையை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என்றார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்களுடன், இப்படம் ஒரு இணையற்ற சினிமா அனுபவமாக இருக்கும்.