பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை

பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை

பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் "லப்பர் பந்து" என்ற புதிய படத்தின் பூஜை மார்ச்-3 நடைபெற்றது. இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், எஃப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார். லவ் டுடே படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரன் பேபி ரன் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் G.மதன் எடிட்டிங்கை மேற்கொள்ள, ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . தயாரிப்பு மேற்பார்வையை பால்பாண்டி கவனிக்க, நிர்வாகத் தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார் ஷ்ரவந்தி சாய்நாத். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது.
Read More
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யான், நதியா, யோகி பாபு, இவானா!

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யான், நதியா, யோகி பாபு, இவானா!

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதன் போது திருமதி சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார்.…
Read More
ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம் !

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம் !

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்  இயக்கம் - கார்த்திக் சுந்தர் நடிகர்கள் - ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் கதை - சமையல் மட்டும் விரும்பும் வாழ்க்கையில் எதையும் ஒழுங்காக செய்யத் தெரியாத இளைஞன், பிஸின்ஸ்MPA முடித்து காதல் தோல்வியில் இருக்கும், food டிரக் ஆரம்பிக்க நினைக்கும் ஒரு பெண், இருவரும் பெண்பார்க்கும் படலத்தில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். பின் இருவரும் இணைந்து பிஸினஸ் செய்யமுடிவெடுக்கிறார்கள் அவர்கள் பிஸினஸ் வென்றதா அவர்கள் காதல் வாழ்வு என்ன ஆனது என்பதே கதை. தெலுங்கில் சக்கை போடு போட்ட பெல்லி சூப்புலு பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல் தமிழுக்குவந்திருக்கிறது. ஒரு படத்தின் ஆன்மா அந்தந்த மொழி பின்ன்ணியுடனும் கலாச்சார பின்னணியுடனும்இருக்கும். அதை சரியாக மீட்டெடுக்காவிட்டால் ரீமேக் சரியாக வராது. ஆனால் இப்படத்தில் அதை ஓரளவுநேர்த்தியாகவே கையாண்டு ஜெயித்திருக்கிறார்கள் படத்தின் முதல் பாதி படு கலகலப்பாக இருக்கிறது. ஹரீஷ் கல்யாண் கதை அதில் வரும் சம்பவங்கள்,…
Read More