மாறுபட்ட களத்தில் எலக்சன் கவனம் ஈர்க்கிறதா?

மாறுபட்ட களத்தில் எலக்சன் கவனம் ஈர்க்கிறதா?

உறியடி மூலம் கவனம் ஈர்த்த விஜயகுமார் நடிப்பில், சேத்துமான் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் எலக்சன். உள்ளாட்சித் தேர்தல் களப் பின்னணியில் நடைபெறும் கதை எப்படி இருக்கிறது இந்த எலக்சன். நாட்டின் உச்சகட்ட அரசியல் எங்கு ஆரம்பிக்கிறது என்றால் அது உள்ளாட்சி தேர்தலில் இருந்து தான், ஆனால் அந்தக்களத்தில் கட்சிகளை விட உள்ளூர் ஆட்களின் பகை, துரோகம், ஆசை என அந்த உள்ளூர் ஆட்களின் உறவும் அரசியலும் எந்த படத்திலும் பேசவில்லை, ஆனால் இந்தப்படம் அதை நெருக்கமாக பேசுகிறது. கட்சிகள் கோலோச்சும் அரசியலில் தொண்டன் ஒருவனின் மகன் தலைவன் ஆவதே எலக்சன் படத்தின் கதை. வாணியம்பாடி அருகே, அரசியல் கட்சியொன்றில் கொள்கைப் பிடிப்புள்ள தொண்டனாக இருக்கிறார் ஜார்ஜ் மரியன். அவருக்கு நேரும் அவமானத்தை துடைப்பதற்காகத் தேர்தலில் நிற்கும் அவருடைய மகன் உறியடி விஜய் குமார், தேர்தலில் வென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. கிராமங்களில் வாழும் மக்களுக்கு…
Read More
உரியடி விஜயகுமாரின் எலக்சன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

உரியடி விஜயகுமாரின் எலக்சன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர். . இந்த நிகழ்வில்,   நடிகை ரிச்சா ஜோஷி பேசுகையில்,'' இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேசுகிறேன். இந்திய சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை வழங்கிய தமிழ் திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த மேடையில் நிற்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் மொழி உச்சரிப்பில் உதவிய சக கலைஞரான விஜய் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ''…
Read More
*விஜய் குமாரின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

*விஜய் குமாரின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

*விஜய் குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு! *ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!* தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தீரா..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'சேத்துமான்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும்…
Read More
உறியடி நடிகர் விஜய்குமாரின் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி!

உறியடி நடிகர் விஜய்குமாரின் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி!

'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'எலக்சன்'. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாள, கலை இயக்கத்தை…
Read More
VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓய்வில்லை – ராதாகிருஷ்ணன்!

VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓய்வில்லை – ராதாகிருஷ்ணன்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியும்போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி என நான்கு அணிகள் போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்" தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணிக்கும்-தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணிக்கு இடையில் மட்டுமே போட்டி என்கிற சூழல் நிலவி வருகிறது. ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது நேற்றைய (11.11.2020) அன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த T.  ராஜேந்தர் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது போல் பேசினார். செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் கூறுவதை தவிர்த்து வழக்கமான எதுகை மோனை வார்த்தை ஜாலங்களை கையாண்டார்.  VPF க்கு எதிராக முதல் குரல் கொடுத்தது நான் தான்…
Read More
தயாரிப்பாளர்கள் சங்கம் பலப்படுத்தப்படும்: நிரந்தர வருவாய் உருவாக்கப்படும் – ராமசாமி முரளி!

தயாரிப்பாளர்கள் சங்கம் பலப்படுத்தப்படும்: நிரந்தர வருவாய் உருவாக்கப்படும் – ராமசாமி முரளி!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர்போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. .இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் ராமசாமி என்கிற முரளியுடன்தேர்தல்கள நிலவரம் பற்றி ஒரு நேர்காணல். என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பதுVPF கட்டணம். அதைக் கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைசெய்வதற்கான முயற்சியை எங்கள் அணி வெற்றி பெற்றால் செய்வோம். நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்து அனைவருக்கும் சம…
Read More
தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியை ஏன் ஜெயிக்க வைக்க வேண்டும்? – ராதாகிருஷ்ணன்!

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியை ஏன் ஜெயிக்க வைக்க வேண்டும்? – ராதாகிருஷ்ணன்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டி யிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது. ஏற்கனவே சங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட் படத்தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர் கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர். நடைபெறவுள்ள தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும்அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அவருடன் ஒரு மினிப் பேட்டி.. .என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம். அதைக் கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய வழிமுறைகளைச் செய்வோம். நவீன…
Read More
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் எப்போ? யார்? எப்படி போட்டி?

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் எப்போ? யார்? எப்படி போட்டி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரி யாக தமிழக அரசு நியமித்தது. ஆனால், தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது. அதன்படி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி…
Read More