18
Oct
பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அவருடைய இயக்கத்தில் விரைவில் ரிலீசாக இருக்கும் பத்தாவது படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.தீபாவளி வெளியீடாக வர இருந்த இந்தப்படம் தமிழக அரசின் உள்ளூர் வரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்த புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாது என்ற திடீர் போராட்ட அறிவிப்பாலும், ‘மெர்சல்’ படத்தின் பிரம்மாண்ட ரிலீசாலும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வருகிற என்கிற தகவல் முன்னமே தெரிந்திருந்தும் ஏன் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை சுசீந்திரன் வெளியிட முடிவு செய்தார் என்றால் ஒவ்வொரு தீபாவளியுமே என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானதாகத்தான் அமைந்திருக்கிறது என்றார். தீபாவளியையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தவர் அந்த அனுபவத்தை நம்மோடு…
