இந்தியில் தயாராகும் தளபதியின் “தெறி படம் !!

இந்தியில் தயாராகும் தளபதியின் “தெறி படம் !!

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் 'VD18 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'VD18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.…
Read More
விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் என புகழ்பெற்ற, இயக்குநர் விஷ்ணு வர்தன் பாலிவுட்டில் “ஷெர்ஷா” படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டில் இருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது 2 ஜூலை 2021 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Dharma Productions சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, Kash Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது.
Read More
பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

பாலிவுட்டில் கமலுக்கு சவால் விடப் போகும் விஜய்சேதுபதி!

தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது. இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை 'காந்தி டாக்ஸ்' மூலம் நனவாக்கி யது குறித்தும் பகிர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'புஷ்பக விமானா' என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம். இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், "இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக்…
Read More
The greatest show man of India – ராஜ்கபூர்!

The greatest show man of India – ராஜ்கபூர்!

தற்போது இந்தி தெலுங்கு தமிழ் என இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் திரையிடப் பட்டு வசூலில் கொடிகட்டி பறக்கலாம்..சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முதன்முதலாய் விதை போட்டவர் நடிகர் ராஜ்கபூர்.. ரஷ்யாவில் ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட இந்தியர் ராஜ்கபூர்தான் என்பார்கள்.. அந்த அளவுக்கு அவரின் படங்கள் ரஷ்யாவில் அமோகமாக ஓடின..! நடிப்பு தயாரிப்பு இயக்கம் மட்டுமின்றி சினிமா பற்றிய தொழில்நுட்பங்களும் ஜாம்பவானாக விளங்கியவர் ராஜ்கபூர். அதனால்தான் அவரை தி கிரேட்டஸ்ட் ஷோ மேன் ஃப் இந்தியா என்று பெருமையோடு பேசுவார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆராவில் (1931) நடித்த பிரிதிவிராஜ் கபூர் அவர்களின் மூத்த மகன்தான் ராஜ்கபூர்.. ! இன்றளவும் இந்தியாவின் நம்பர் ஒன் வசூல் படம் என்று பேசப்படுகிற mughal-e-azam (1960) படத்தில் அக்பர் ஆக வருவார் பிரிதிவிராஜ் கபூர்.. கம்பீரமான குரல் வளத்தோடு படம் முழுவதும் துவம்சம் செய்யும் அவரின் நடிப்பை காண…
Read More
பிக் பீ’ & ‘ஷாஹேந்ஷா’ என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப்படும் அமிதாப்!

பிக் பீ’ & ‘ஷாஹேந்ஷா’ என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப்படும் அமிதாப்!

சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் ’பிக் பி’ எனவும், போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் .  இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் பிடித்து இருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் . உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர் இந்துக்குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். அவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக்கவிஞர் ஆவார். அவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான் , அன்றைய பைஸாலாபாத்தை சேர்ந்த ஒரு சீக்கியப்பெண்மணி ஆவார். ஆரம்ப காலத்தில் பச்சன் 'இன்குலாப்' என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம்…
Read More