முதலமைச்சர் மு.க ஸ்டாலின் `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்’  ஐ திறந்து வைத்தனர்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்’ ஐ திறந்து வைத்தனர்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம் ஸ்டூடியோஸ். பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்படத் தயாரிப்பில் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளையும், மிக பழைமையான கார்களையும், இரு சக்கர வாகனங்கள் கொண்ட `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்' உருவாக்கியிருக்கிறார்கள். அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அரங்கைப் பார்வையிட்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோஸ் தமிழ் சினிமாவில் தயாரித்து கவனம்பெற்ற படைப்புகள் பற்றிய குறிப்புகளும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், விண்டேஜ் கார்கள், படத்தொகுப்புக் கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த மியூசியம் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ``நான் பிறந்த இடமே ஏ.வி.எம் தான். இன்று எனக்கு ஒரு பொன்னான நாள். இந்த மியூசியம் வெறும் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டது அல்ல. சுமார் 80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாறு…
Read More
எப்படி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்?

எப்படி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்?

தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட அதிரடி ஸ்டார் ஆதித்யா உடைய புதிய படமான கருடா தமிழ்ராக்கர்ஸ் எனும் இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த தொடரில் அருண்விஜய் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த நிகழ்ச்சியை மனோஜ் குமார் கலைவாணன் எழுதி ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. அதிக பொருட்செலவில் உருவான ஒரு படத்தை திருட்டுதனமாக வெளியிட போவதாக அறிவிக்கும் ஒரு கும்பலை, காவல்துறை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே கதை. தமிழ் ராக்கர்ஸ் எனும் சட்டவிரோதமான வலைதளம் தமிழ் சினிமாவில் செய்துவந்த குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வலைதொடர் தான் இந்த தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கபட்ட சினிமாவின் பார்க்காத முகத்தை…
Read More
பேத்தி கணவர் நடித்த படத்தை வெளியிட மறுத்த ஏவிஎம் சரவணன்

பேத்தி கணவர் நடித்த படத்தை வெளியிட மறுத்த ஏவிஎம் சரவணன்

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அண்மையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, படத்தில் பல காட்சிகளை மாற்றும்படிக் கூறியிருக்கிறது.அப்படிச் செய்தால் படத்தின் கதை சிதைந்து விடும் என்பதால் மேல்முறையீட்டுக்குச் சென்று ஒரு சில காட்சிகளை தெளிவற்றமுறையில் காட்ட ஒப்புக்கொண்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளனர். அதனால் விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நாயகன் ஆர்யன் ஷாமைச் சந்தித்தோம். படம் குறித்து அவர் கூறியதாவது… நரபலியை மையப்படுத்தி அந்தநாள் படத்தை எடுத்திருக்கிறோம். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை நரபலியை மையப்படுத்திய படங்கள் வந்ததில்லை. நாங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி காட்சிகளையும் மிரட்டலாகப் படமாக்கியுள்ளோம். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், இந்திய அரசியலமைப்பில் நரபலி என்பதற்கு அனுமதியில்லை என்பதால்,…
Read More
எம்.ஜி.ஆரையே அசர வைத்த ‘அன்பே வா’ தயாரான சுவையான கதை!

எம்.ஜி.ஆரையே அசர வைத்த ‘அன்பே வா’ தயாரான சுவையான கதை!

வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்தவர்களை வைத்துப் படமெடுத்த பிரமாண்ட நிறுவனம் ஏவிஎம் தயாரிச்ச படம் ‘அன்பே வா’. பொதுவாக இந்த நிறுவனத்தில் நடித்தாலே, அவர்கள் கொடி இன்னும் உயர ஆரம்பித்துவிடும். சிவாஜியை வைத்தும் ஜெமினியை வைத்தும் ஜெய்சங்கரை வைத்தும் எஸ்.எஸ்.ஆரை வைத்தும் ரவிச்சந்திரனை வைத்தும் என படங்கள் எடுத்த ஏவிஎம்... முதன் முறையாக எம்ஜிஆரைக் கொண்டு எடுத்த படம்தான் அன்பே வா. இதன் கதை உருவானதே அலாதியாக்கும்.. அதாவ்து 1961 ஆம் வருசம் வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமான கம் செப்டம்பர் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் குறிப்பாக மெட்ராஸில் சூப்பர் ஹிட் ஆனது. இதன் உள்ளாக்கத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸில் இருந்த ஏ.சி.திருலோக்சந்தர், தழுவி தனி ஒரு கதை பிடித்தார், ஆனால் ஏ.வி.எம் அப்படத்தைத் தழுவுவதற்கான உரிமையை வாங்கவில்லை என்பது தனிக் கதை. இந்த படத்துக்காக திருலோக்சந்தரின் சம்பளம் 70,000 ஆகும். ஆரூர் தாஸ் படத்தின் வசனங்களை எழுதினார், மற்றும் எஸ்.பி.முத்துராமன் உதவி…
Read More