பல தடைகளை தாண்டி மே 11ல் வெளி வருகிறது ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

பல தடைகளை தாண்டி மே 11ல் வெளி வருகிறது ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

  இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக  அமலாபால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர்  அஃப்தாப் ஷிவ்தசானி  நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’   நிறுவனம் தயாரித்துள்ளது.'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11  முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.   இதையொட்டி  சென்னையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி ,சித்ரா லட்சுமணன் ,தயாரிப்பாளர் முருகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணன்  பேசியவை ' திருச்சி பரதன் பிலிம்ஸ்  உரிமையாளர் திரு விஸ்வநாதன் அவர்கள் ஒரு முதுகெலும்பாக இந்த படத்திற்கு உறுதுணையாக நின்றார். அதனால்தான்…
Read More
`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் வெள்ளி வெளியீடு!

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் வெள்ளி வெளியீடு!

கோலிவுட்டின் அழகு வில்லன் அலைஸ் நாயகன் அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கும்…
Read More
பாஸ்கர் ஒரு ராஸ்கல்:  ஷூட்டிங் ஓவர்!

பாஸ்கர் ஒரு ராஸ்கல்: ஷூட்டிங் ஓவர்!

தமிழில் பிஸியாக நடித்து வரும் அமலா பால், அரவிந்த் சாமியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி விரைவில் இதன் டீசர் வெளிவருமென அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 24) தெரிவித்துள்ளார். நயன்தாரா-மம்மூட்டி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் பாஸ்கர் தி ராஸ்கல். இப்படத்திற்கான வரவேற்பையும், அங்கீகாரத்தையும் கணக்கில் கொண்டு மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். முக்கிய வேடத்தில் நிகேஷா பட்டேலும், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடித்துள்ளனர். அரவிந்த் சாமி இடம்பெற்றுள்ள டீசர் அறிவிப்புக்கான…
Read More