‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான 'கல்கி 2898 AD' எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான…
Read More
பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு ‘கல்கி 2898 AD’ என பெயரை மாற்றியுள்ளனர்!

பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்கு ‘கல்கி 2898 AD’ என பெயரை மாற்றியுள்ளனர்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக 'கல்கி 2898 AD' என பெயரிடப்பட்டுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா - ஈடு இணையற்ற படைப்பு. அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன் யாரும் சொல்லிராத கதை சொல்லலில் இந்த திரைப்படம் தயாராகிறது. மேலும் இத்தகைய ஜானரில் அறிவியல் புனைவு கதை திரைப்படத்திற்கான எல்லையை விரிவாக்கம் செய்து புதிய வரையறையுடன் இப்படம் உருவாகிறது. 'கல்கி 2898 AD' ன் பிரம்மாண்டமான வெளியீடு, சான் டியாகோ காமிக்-கானில் நடைபெற்றது. அங்கு திரைப்படத்தின் காட்சிகள் அதன் தொலைநோக்கு கருத்து மற்றும் மயக்கும் காட்சி அமைப்புகள் மூலம் வருகை தந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது. படத்தின் புதிய தலைப்பு மற்றும் படத்தின் சாராம்சத்தை துல்லியமாக உள்ளடக்கிய காணொளி.. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில்…
Read More
ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை!

ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை!

நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கின்றார் என்றும், ப்ராஜெக்ட் கே என்ற பான் இந்திய படத்தில் நடிப்பதற்காக கமலுக்கு 120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் ஒரு நடிகன் என்பதையும் தாண்டி சினிமாவின் தீவிர ரசிகனாவேன். எந்த ஒரு புதுமையான விஷயங்களை பாராட்டும் ரசிகனான எனக்கு ப்ராஜெக்ட் கே படத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் எடுத்துள்ள கதைக்களத்தை கேட்டுவிட்டு ஒரு ரசிகனாக ரசித்தேன். அதைப்போல சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகின்றேன். மேலும் அமிதாப் பச்சனுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் என்றாலும் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன் என்று சொல்லி இருக்கார் கமல். உலகநாயகன் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுது.
Read More
நடிகை அனுஷ்கா ஷர்மா விதி மீறியதாக அவரது பாதுகாவலருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது

நடிகை அனுஷ்கா ஷர்மா விதி மீறியதாக அவரது பாதுகாவலருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது

நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விதி மீறியதாக கூறி அவரது பாதுகாவலருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்குள்ளது, ஆக்டர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது டிராபிக் ஜாம் ஆனதாகவும், சாலையில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றதாகவும் தகவல் பரவிச்சு. இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘சாமானியர்களுக்கு மட்டும் தான் சாலை விதியா? பிரபலங்களுக்கு விதிவிலக்கா’ என விமர்சிச்சாய்ங்க. இதை யடுத்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்…
Read More