ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை!

0
34

நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கின்றார் என்றும், ப்ராஜெக்ட் கே என்ற பான் இந்திய படத்தில் நடிப்பதற்காக கமலுக்கு 120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், நான் ஒரு நடிகன் என்பதையும் தாண்டி சினிமாவின் தீவிர ரசிகனாவேன். எந்த ஒரு புதுமையான விஷயங்களை பாராட்டும் ரசிகனான எனக்கு ப்ராஜெக்ட் கே படத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் எடுத்துள்ள கதைக்களத்தை கேட்டுவிட்டு ஒரு ரசிகனாக ரசித்தேன். அதைப்போல சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகின்றேன்.

May be an image of text

மேலும் அமிதாப் பச்சனுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் என்றாலும் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன் என்று சொல்லி இருக்கார் கமல்.

உலகநாயகன் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுது.