11
Apr
ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான 'டியர்' திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியே மிக வித்தியாசமான கூட்டணி, இவர்கள் இருவர் ஜோடியில், குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம் தான் டியர். சில மாதங்கள் முன்பாக குறட்டைப் பிரச்சனையை மையமாக வைத்து குட் நைட் என்ற படம் வந்தது. மணிகண்டன் நடிப்பில் வந்திருந்த அந்த திரைப்படம், குறட்டை பிரச்சனையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பங்களையும் விரிவாக அலசி இருந்தது. கிட்டத்தட்ட டியர் படத்தின் கதையும் அதேதான். ஆனால் இந்த படத்தில் குறட்டை பிரச்சனை இருப்பது கதாநாயகிக்கு!! நம் தினசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு சிறு பிரச்சனை எப்படி பூதாகரமாக மாறுகிறது என்பதை திரைக்கதை ஆக்கும் பாடங்கள் பெரும்பாலும் ஜெயித்து விடும். அந்த வகையில்…