மூன்று மொழிகளில் தயாராகும் டிரைவர் ஜமுனா படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

மூன்று மொழிகளில் தயாராகும் டிரைவர் ஜமுனா படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடைய திரையுலக பயணத்தைத் தொடக்கம் முதல் பார்த்தவர்கள், அவருடைய வெற்றிக்குப் பின்னால் எப்படியொரு கடின உழைப்பு மறைந்துள்ளது என்பதை அறிவார்கள். இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளாகும். அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரசிகர்களும் பிறந்த நாளுக்கான பிரத்தியேக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை அறிவித்துள்ளார்கள். 'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப்…
Read More
‘கட்டப்பாவ காணோம்’  எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘கட்டப்பாவ காணோம்’ எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தை வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 'கட்டப்பாவ காணோம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது. இதுவரை நான் நடித்த…
Read More