என்னது.. ‘சபாஷ் நாயுடு’ ட்ராப் ஆயிடுச்சா?

என்னது.. ‘சபாஷ் நாயுடு’ ட்ராப் ஆயிடுச்சா?

கமல்ஹாசன் இயக்கத்தில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சபாஷ் நாயுடு. இப்படம் தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த சபாஷ் நாயுடு வெளிவராது என்று செய்திகள் வெளியாவதை கமல் தரப்பு மறுத்து உள்ளது. .   முன்னதாக இந்த சபாஷ் நாயுடு திரைப்படம் ஒரு குறுகில கால தயாரிப்புக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் அமெரிக்க படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து கமல்ஹாசனே இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஜோசப் தனது மனைவிக்கு விபத்து நேர்ந்ததால் அவரும் படத்தில் இருந்து விலகினார். மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு…
Read More
பிக் பாஸ் பார்க்கலை! – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்!

பிக் பாஸ் பார்க்கலை! – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்!

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது…”ஒரு இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்காகவே படித்து இசை துறையில் "உன்னை போல் ஒருவன்" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானேன் ஆனால் காலச்சூழ்நிலை என்னை நடிகை ஆக்கிவிட்டது. அப்பா இதுவரை எனக்கு எந்த சிபாரிசும் யாரிடமும் செய்தது இல்லை. நான் சரியாகவோ தவறாகவோ எது செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு. விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்து அப்பா சாதித்து காட்டியுள்ளார். நான் இதுவரை அப்படி எதுவும் சாதிக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த இலக்கை அடையவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. படம் இயக்கம் எண்ணம் தற்போது இல்லை ஏனென்றால் இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் தவறவிடமாட்டேன். அதுமட்டுமல்லாமல் நான்…
Read More