14
Oct
லைகா தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. சமூக அக்கறை மிக்க படைப்பு என பரவலாக பாராட்டைப் பெற்ற இப்படம் இன்று திங்கட்கிழமையான இன்று டிக்கெட் புக்கிங்கில் கடுமையாகச் சரிவைச் சந்தித்துள்ளது. முன்னதாக ஜெய்பீம் மூலம் பெரும் பாராட்டுக்களைக் குவித்த த செ ஞானவேல் சூப்பர்ஸ்டாரை இயக்கியுள்ளார் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது , மேலும் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியுள்ளது வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகள் கொண்டாட்டமாக இருக்கும், ஆனால் இப்படம் வெளியானபோது விஜய்யின் கோட் படத்தை விட குறைவாகவே டிக்கெட் புக்காகி தடுமாறியது, ஆனால் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், விடுமுறை நாட்களில் அனைத்து திரையரங்குகளும் ஃபுல்லானது. ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆனால் அதைத்தொடர்ந்து…