நிபுணன் படத்தில் நடிக்க தயங்கினேன்! – பிரசன்னா ஓப்பன் டாக்!

நிபுணன் படத்தில் நடிக்க தயங்கினேன்! – பிரசன்னா ஓப்பன் டாக்!

பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷய மாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இது போல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா. Action king அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்துவரும் ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள படம் "நிபுணன்". இது அர்ஜுனின் 150வது படமாகும். அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன் , வரலக்ஷ்மி சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ' இந்த ‘நிபுணன்' பட குறித்து பிரசன்னா பேசுகையில், ''இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்திய நாதன் எனது நீண்ட நாள் நண்பர். ஆரம்பத்தில் இதில் நடிக்க தயங்கினேன் . பின்னர் கமிட் ஆகி நடித்து முடித்து இப்போப் பார்த்தால்  'நிபுணன்' ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. இதை நீங்களே படம் பார்க்கும்…
Read More
‘நிபுணன்’ படத்தின்  ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது!

‘நிபுணன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது!

ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்துள்ளனர் . டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'நிபுணன்' படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது. புதுமுக இசையமைப்பாளர் நவீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இப்படப்பாடல்கள் மிக அருமையாக இருப்பதாகவும் , நிச்சயம் மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் என்று இப்படக்குழுவினர் கூறுகின்றனர். அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 'நிபுணன் ' படத்தை 'Passion Studios' சார்பில் உமேஷ் , சுதன் சுந்தரம் , ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குநர் அருண் வைத்தியநாதன். ‘அச்சமுண்டு... அச்சமுண்டு’ மோகன்லால் நடித்த ‘பெருச்சாளி’ என்ற மலையாளப் படத்தையும் இயக்கியவர், தற்போது…
Read More
அர்ஜூனின் 150வது படமான ‘நிபுணன்’ -ஜூலை 28 ரிலீஸ் கன்ஃபார்ம்!

அர்ஜூனின் 150வது படமான ‘நிபுணன்’ -ஜூலை 28 ரிலீஸ் கன்ஃபார்ம்!

ஆக்ஷன் கிங்'அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28அன்று வெளி வர உள்ளது. நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லான 'நிபுணன்' திரைப்படத்தில் அவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளி ஆகி, அதற்கு மக்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் பெருமளவு வரவேற்பு கிடைக்க பெற்றதால் 'நிபுணன்' திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் உருவாகியுள்ளது . மிக மிக வித்தியாசமான கதை பிண்ணனியில் உருவாகும் 'நிபுணன்" திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் 'கல்யாண சமையல் சாதம்' ஆகிய தமிழ் படங்களையும், 'பெருச்சாளி' என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன். ”நிபுணன்” என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனை யாளனின் கதை தான் நிபுணன். ஹோலி வுட் படங்களை…
Read More