அர்ஜூனின் 150வது படமான ‘நிபுணன்’ -ஜூலை 28 ரிலீஸ் கன்ஃபார்ம்!

ஆக்ஷன் கிங்’அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28அன்று வெளி வர உள்ளது. நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லான ‘நிபுணன்’ திரைப்படத்தில் அவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளி ஆகி, அதற்கு மக்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் பெருமளவு வரவேற்பு கிடைக்க பெற்றதால் ‘நிபுணன்’ திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் உருவாகியுள்ளது . மிக மிக வித்தியாசமான கதை பிண்ணனியில் உருவாகும் ‘நிபுணன்” திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு’ மற்றும் ‘கல்யாண சமையல் சாதம்’ ஆகிய தமிழ் படங்களையும், ‘பெருச்சாளி’ என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன்.

”நிபுணன்” என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனை யாளனின் கதை தான் நிபுணன். ஹோலி வுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி,அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை பூர்த்தி செய்யும் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் ” நிபுணன்

இப்படத்தை ‘Passion studios’ சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்திய நாதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கான இசையமைப்பாளர் நவீனின் இசையில் எல்லா பாடல்களுமே இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவிலும், சதிஷ் சூர்யாவின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி , அருண்ராஜ் காமராஜ் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

தற்போதைய சோதனை காலத்தை கடந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை , மீண்டும் சினிமா ரசிக்கும் ரசிகர் கூட்டங்களை திரையரங்கிற்கு வர வைத்து , பழைய பாதைக்கு இப்படம் கொண்டு போகும் என்று சினிமா வட்டாரங்களால் நம்பப்படுகிறது. மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பல புதிய விளம்பர யுக்திகளை இப்பட குழுவினர் முழு மூச்சுடன் கையாண்டு வருகின்றனர். ஜூலை 28 அன்று “நிபுணன்” வெளி வரும் என்று உறுதியான நிலையில், அந்த தேதிக்காக ரசிகர்கள் ஆர்வத்தோடும் உற்சாகமாகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.