ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

எழுத்தாளர்களில் பலரும், திரைப்பட இயக்குநர்களில் பலரும் தங்கள் சிறுவயதிலும், இளமைப் பருவத்திலும் விருப்பக் கனவாய் கொண்டிருந்தவைகளையே பிற்காலத்தில் படைப்பாக்குகிறார்கள்.‘ஸ்பீல் பெர்க் ‘கும் அப்படித்தான். ஆனால், அவருடைய கனவு கள் வித்தியாசமானவை, மிகப் பெரியவை. ஸ்பீல் பெர்க் சக்திமிக்க இயக்குநராகி பெருமளவில் செல்வத்தைக் குவிப்பதற்குக் காரணமாயிருந்தது அவருடைய நுண்ணறிவேயாகும். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1947-ல் இதே டிசம்பர் 18-ஆம் நாள் பிறந்தார். பிறந்த இடம் ஸின் ஸினாட்டி (அமெரிக்க ஓஹியோ மாநிலம்). சின்ன வயதிலேயே விசித்திரமான பொருட்களின் மீதும், அதிசயமான விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவர் அவர். வானத்தில் இருந்து எரிகற்கள் மழையாய் விழு வதைப் பார்க்க அதிகாலை 3 மணிக்குத் தனது தந்தை யோடு மலைப்பக்கம் சென்றிருக்கிறார். அவருடைய தந்தை ஓர் எலக்ட்ரிகல் என்ஜினீயர். அமெரிக்கா அப்போது கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்கியிருந்தது. அவர் தனது தொழிலை முன்னிட்டு குடும்பத்தோடு ஊர் ஊராய் மாறியபடி இருந்தார். தந்தையின் நேர உணர்வு, எதையும் நேர்த்தியாகச் செய்யும் தன்மை…
Read More
‘Spiderman: No Way Home எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா ?

‘Spiderman: No Way Home எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா ?

இயக்குநர் -  jon watts நடிகர்கள் - Tom Holland,  Zendaya, Jacob, Benedict Cumberbatch கதை - Spiderman அடையாளம் உலகுக்கு தெரிந்துவிட, அதனால் அவனது நண்பர்களுக்கும் சிக்கல் உண்டாகிறது, அவர்கள் வாழ்க்கை பாதிக்க ஆரம்பிக்க, அதனை தீர்க்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உதவியை ஸ்பைடர்மேன் நாடுகிறார். அவர் ஒரு மந்திரத்தை ஏவ அதில் ஏற்படும் சிக்கல்களால் மல்டிவெர்ஸ் உலகம் திறந்து, பல வில்லன்கள் வருகிறார்கள்,  அவர்களை ஸ்பைடர்மேன் எப்படி, யாரின் உதவி கொண்டு ஜெயித்தான் என்பது தான் கதை மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில்,  Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது இந்த ஸ்பைடர் மேன் படம் தான் எனலாம் அதற்கு முக்கிய காரணம் படத்தின் கதை மல்டிவெர்ஸ் சம்பந்தமானது என்பதும், தமிழகம் முதல் உலகமெங்கும் முதன் முதலில்…
Read More
உலகமெங்கும் எதிர்பார்ப்பை குவித்த Spider-Man No Way Home திரைப்படம், டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முடியடித்ததால், முடங்கிய திரையரங்கு இணையதளங்கள் !

உலகமெங்கும் எதிர்பார்ப்பை குவித்த Spider-Man No Way Home திரைப்படம், டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முடியடித்ததால், முடங்கிய திரையரங்கு இணையதளங்கள் !

மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது Spider-Man No Way Home திரைப்படம். உலகம் முழுதும் 2021 டிசம்பர் 17 வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது. மார்வல் திரையுலகத்தில் Spider-Man சூப்பர் ஹீரோவின், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் Spider-Man No Way Home. இப்படத்தில் Tom Holland சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும் அவருக்கு ஜோடியாக Michelle 'MJ' பாத்திரத்தில் Zendaya வும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய Doctor Stephen Strange பாத்திரத்தில் Benedict Cumberbatch நடித்துள்ளார். இப்படம் மல்டிவெர்ஸ் எனும் வித்தியாசமான கான்செப்டில் பல உலகங்களை இணைக்கும் கதைக்கருவில் உருவாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன் வந்த Spider-Man…
Read More
Ghostbusters: Afterlife  திரை விமர்சனம்!

Ghostbusters: Afterlife திரை விமர்சனம்!

இயக்கம் - Jason Reitman நடிகர்கள் -  Carrie Coon, Finn Wolfhard, Mckenna Grace, மற்றும்  Paul Rudd  கதை - தந்தை இறந்த வீட்டை விற்க ஓஹ்லஹோமா உள்ள ஒரு  நகரத்திற்கு தன்  தந்தை இருந்த பூர்வீகஇடத்திற்கு வருகிறாள் ஒரு தாய். அங்கு அந்த  குழந்தைகள் தாத்தா பேய்களை அடிப்பவராக இருந்ததைஅறிகிறார்கள். தாத்தா தயாரித்து வைத்த ஆய்தங்களை கொண்டு அவர்கள் தற்காலத்தில் பேய்களை எப்படிஅழிக்கிறார்கள் என்பதே கதை ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான கோஸ்ட்பஸ்டர்ஸ்' (1984) மற்றும் 'கோஸ்ட்பஸ்டர்ஸ் II' (1989) படங்களின்  தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக வந்திருக்கும் படம். ஏற்கனவே 2016 ல் ஒரு பகுதி இதே போல் வந்து பெரும் தோல்வி அடைந்தது. ஆனால் அதிலிருந்து மாறுபட்டுகொஞ்சம் மேம்பட்ட திரைக்கதை அமைப்பில் வந்திருக்கிறது இப்படம் ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ (1984) மற்றும் ‘கோஸ்ட்பஸ்டர்ஸ் II’ (1989) ஆகியவற்றை இயக்கிய இவான் ரீட்மேனின்மகன் ஜேசன் ரீட்மேன் ‘ஆஃப்டர் லைஃப்’ இயக்கியுள்ளார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இளைய…
Read More
ரசிகர்களை கவர்ந்ததா ? மார்வலின் புதிய சூப்பர்ஹீரோ படம் – Eternals திரை விமர்சனம் !

ரசிகர்களை கவர்ந்ததா ? மார்வலின் புதிய சூப்பர்ஹீரோ படம் – Eternals திரை விமர்சனம் !

இயக்கம் - ஜொலோ ஷாவோ (Chloé Zhao) நடிகர்கள் - ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமாயில் நஞ்சியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, கிட் ஹரிங்டனுடன், சல்மா ஹெய்க், ஏஞ்சலினா ஜோலி பல்லாயிரம் வருடங்கள் முன்பு பூமியில் மனிதர்களை வேட்டையாடும் டீவியண்ட் மிருகங்களை அழிக்க, நட்சத்திர கூட்டத்தின் பின்னணியிலிருந்து Eternals சூப்பர் ஹீரோக்களை பூமிக்கு அனுப்புகிறது ஒரு சக்தி. மனிதர்களின் எந்த விசயத்திலும் தலையிடக்கூடாது என உத்தரவும் அவர்களுக்கு இருக்கிறது. 5000 வருடங்களாக மறைந்து வாழும் அவர்கள் அழிந்து போன டீவியண்ட் திரும்பவும் வரவே மறைவிலிருந்து மீண்டும் வந்து ஒன்று சேர்கிறார்கள். டீவியண்ட் மீண்டும் வந்தது எப்படி உலகத்திற்கு வரும் அழிவின் பின்னால் இருக்கும் உண்மை என்ன எனபது தான் Eternals படத்தின் கதை. உலகம் முழுக்க பல்லாயிரணக்கில் மார்வல் திரை உலகத்தில் Phase 4 பிரிவில் அடுத்ததாக 10 சூப்பர்…
Read More
Eternals – புதிய டீசர்,- இணையத்தில் வைரலாகி வருகிறது !

Eternals – புதிய டீசர்,- இணையத்தில் வைரலாகி வருகிறது !

Eternals - புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது ! Marvel Studios வழங்கும் மார்வல் சூப்பர்ஹீரோ திரையுலகத்தின்  25 வது திரைப்படம் Eternals, இதுவரை நீங்கள் திரையில் கண்டிராத, புத்தம் புதிய சக்தி மிக்க 10 புதிய சூப்பர்ஹீரோக்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திரைப்படம் தீபாவளி திருநாள் கொண்டாட்டமாக, நவம்பர் 5 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரமாண்ட வெளியீடாக வெளியாகிறது. Eternals டீசர் ரசிகர்களுக்கு சில ஆச்சரயங்களை தந்துள்ளது. இந்த டீசரில் முழுக்க முழுக்க இந்திய மரபிலான திருமண காட்சி ஒன்று, நடன காட்சி, இறுதியாக Eternals அனைவரும் தங்களை வெளியுலகிற்கு அறிமுகபடுத்தி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த டீசரில் இந்திய நடிகரான ஹரீஷ் படேல் பாத்திரம் இன்னும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
Read More
Dune திரைப்படம் மிரட்டலாக இருக்கிறதா ?

Dune திரைப்படம் மிரட்டலாக இருக்கிறதா ?

Dune விமர்சனம் இயக்கம் - Denis Villeneuve நடிகர்கள் - Timothée Chalamet, Rebecca Fergusson, Oscar Isaac, Josh Brolin, Stellan Skarsgård   கதை - Arrakis என்கிற ஒரு கிரகத்தில் Melange என்கிற ஓர் பொருள் உற்பத்தியாகிறது. முழுக்க லாபம் தங்க துகள்களை சலித்து எடுத்து லாபம் பார்க்க மொத்த உலகமும் ஆசைப்படுகிறது. Atreides அரசனுக்கு Arrakis அங்கு அந்த புதையலை எடுக்கும் பொறுப்பை தருகிறது. இப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்கும் அப்பகுதியை தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வர முற்படும் Arrakisக்கும் பிரச்சனை இருக்கிறது இதில்  Atreides அரச குடும்பம் பலியிடப்பட்டுகிறது அதிலிருந்து இளவரசன் எப்படி தப்பிகிறான் என்பது தான் இந்த முதல் பாகத்தின் கதை Dune க்கு பெரிய வரலாறு உண்டு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இணையான வரலாறாக அதை சொல்லலாம். 1965 ல் Frank Herbert என்கிற நாவலாசிரியர்,எழுதிய நாவல் தான் இது.…
Read More
ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் முதலில் முத்திரை பதித்த ஷான் கானரி காலமானார்!

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் முதலில் முத்திரை பதித்த ஷான் கானரி காலமானார்!

முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான சர் சீன் கானரி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. 1962-ல் வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான 'டாக்டர் நோ' வில் இவர் தான் பான்ட் ஆக வருவார்.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962-ல் தான் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. 'டாக்டர் நோ' என்ற அந்த படத்தில் தான் சீன் கானரி முதல் பாண்டாக நடித்தார். அதற்குப் பின் 'பிரம் ரஷ்யா வித் லவ்', 'கோல்ட் பிங்கர்', 'தண்டர் பால்', 'யூ ஒன்லி லிவ் ட்வைஸ்', 'டைமண்ட்ஸ் பார் எவர் ' மற்றும் நெவர் சே நெவர் அகய்ன்' ஆகிய 7 படங்களில் பாண்டாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 1962ல் தொடங்கி 83 வரை இவர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து வந்தார். 'அன்டச்சபில்ஸ்' என்ற படத்தில் நடித்ததற்காக 1988ல் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான…
Read More
அர்னால்டுக்கு இரண்டாவது இதய அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக தகவல்!

அர்னால்டுக்கு இரண்டாவது இதய அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக தகவல்!

73 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக மருத்துவமனையில் படுக்கையில் இருந்து ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளார். நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக 2018-ம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஹாலிவுட் திரைப்பட நடிகரும், அமெரிக்காவின் முன்னாள் அரசியல் தலைவருமாக இருந்தவர் அர்னால்டு. இவரது “டெர்மினேட்டர்” சீரியஸ் திரைப்படங்கள் உலகப் பிரபலம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2011 வரை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இருந்துள்ளார். மீண்டும் திரை உலகிற்கு திரும்பிய இவர், ”டெர்மினேட்டர் டார்க் பேட்” என்ற திரைப்படத்தில் நடித்தார் தற்போது 73 வயதான அர்னால்டுக்கு ஏற்கனவே ஒரு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இம்முறை இதயத்தில் இருக்கும் பெருநாடி வால்வை மாற்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அர்னால்ட், "க்ளீவ்லேண்ட் மருத்துவமனைக்கு நன்றி. எனக்கு இப்போது போன அறுவை சிகிச்சையில் வைக்கப்பட்ட புதிய…
Read More
ஆஸ்கர் அவார்ட் மூன்று வாங்கிய பாராசைட் படம் – மினி லுக்!

ஆஸ்கர் அவார்ட் மூன்று வாங்கிய பாராசைட் படம் – மினி லுக்!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மூன்று டைப்பிலான சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற முதல் அயல் மொழித் திரைப்படம் என்ற பெருமையை பாராசைட் திரைப்படம் பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டிருந்த தென் கொரிய திரைப்படமான பாராசைட், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை ஆகிய விருதுகளை வென்றது. தென் கொரிய படமொன்று ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை, மேலும் சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் மற்ற ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட்டு வென்றுள்ள முதல் அயல் மொழித் திரைப்படமும் பாராசைட் தான். 1917 படத்துக்கும் பாராசைட் படத்துக்குமே கடைசி கட்டத்தில் கடும் போட்டி நிலவியதாக ஹாலிவுட் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. பாராசைட்டின் வெற்றி கான்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப் பனை விருதைப் பெற்றதிலிருந்து தொடங்கியது. தொடர்ந்து, அமெரிக்க…
Read More