தமிழில் வெளியாகும் பேட்மேன் !

ஹாலிவுட் படங்களுக்கு தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பிரபல ஹாலிவூட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பரோஸ் புரொடக்‌ஷனில் உருவான தி பேட்மேன் திரைப்படம் இந்தியாவில் மார்ச் மாசம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சூப்பர் ஹீரோ படங்களுக்கு சர்வதேச அளவில் பெரிய சந்தை இருக்குது. இந்தியாவிலும் இவ்வகைப் படங்கள் கணிசமாக வசூலிக்கின்றன. சமீப காலமாக அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என மார்வெலின் கை வேற லெவலில் இந்தியாவில் வரிகள் போக 200 கோடிகளுக்கு மேல் வசூலிச்சுது.

ஸ்பைடர் மேனுக்கு இணையாக ரசிக்கப்படும் மற்றொரு சூப்பர்ஹீரோ பேட்மேன். டிசி காமிக்ஸின் பேட்மேன் கதாபாத்திரத்தை வைத்து பல படங்கள் வந்துள்ளன. அதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ் திரைப்படங்கள் முக்கியமானவை. இவ்வகை படங்களுக்கு பெரிய அளவில் கதைகள் இருப்பதில்லை. எடுத்த கதையையே பட்டி டிங்கரிங் செய்து ரீபூட் என்று மறுபடியும் எடுப்பார்கள். இந்த தி பேட்மேன் படமும் அப்படித்தான் எடுக்கப்பட்டுள்ளது.

இதுலே பேட்மேனாக முதல்முறையாக ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ளார். இவர் டுவைலைட் படத்தின் மூலம் பிரபலமானவர். பேட்மேன் என்றால் கிறிஸ்டியன் பேல்தான் நினைவுக்கு வருவார். அவர் பேட்மேனாக நடிப்பதை தவிர்த்த பின் கடும் சர்ச்சைக்கு நடுவில் பென் அஃப்லெக் பேட்மேனாக நடிச்சார். அவர்தான் இந்தப் படத்தையும் எழுதி, இயக்கி, நடிப்பதாக இருந்தது. முதலில் இயக்கத்திலிருந்து விலகியவர் பிறகு ஒட்டு மொத்தமாக படத்திலிருந்து விலக, தி பேட்மேனை மேட் ரீவ்ஸ் இயக்குவதாக முடிவானது. பேட்மேனாக நடிக்க ராபர்ட் பேட்டின்சனை தேர்வு செய்தனர்.

புதிய கூட்டணியில் தயாரான புதிய பேட்மேன் திரைப்படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகிறது. அதேநாள் படத்தை இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.