இந்திய காலபந்து வரலாற்றை பேசும் படம் மைதான் !!

இந்திய கடைசியாக 1962 ஆசிய விளையாட்டு போட்டிகளில் கால்பந்தாட்டத்தில் கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 64 வருடங்கள் ஆகிவிட்டது ஒரு கோப்பையைக் கூட இன்று வரை வெல்லவில்லை. எத்தனை கொடுமையான விசயம்

ஆனால் இந்திய காலப்பந்தாட்டத்தின் பொற்காலமாக சொல்லப்படுகிற 1956 முதல் 1962 வரை, இந்திய கால்பந்தாட்ட கோச்சாக பணிபுரிந்து இந்தியாவை உலகமே திரும்பிப்பார்க்க வைத்த, ரஹீம் எனும் அற்புதமான வரலாற்றை பேசுவது தான் இந்த மைதான் திரைப்படம்.

ஏன் இந்தியா விளையாட்டு போட்டிகளில் இத்தனை பின் தங்கி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் வாங்கிய பிற்பாடு உலகளவில் நமக்கு மரியாதை வாங்கி தந்தது விளையாட்டுப் போட்டிகள் தான்.

கிரிக்கெட், கால்பந்து, ஓட்டம் நம் விளையாட்டு வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளில் தங்கள் திறமையை கொட்டினார்கள் ஆனால் அ
உரியவர்களுக்கு உரித்தான வாய்ப்புகள் வழங்கப்பட்டதா ? இல்லையே அந்த சோக வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்கிறது இந்தப்படம்.

ஏ ஆர் ரஹீம் தனக்கு கிடைத்த சொற்ப வாய்ப்பில் இந்தியாவை எப்படி தலை நிமிரச்செய்தார் என்பதை மிக அழுத்தமாக பதிவு. செய்துள்ளது.
6 ஆண்டுகள் கோச்சாக இருந்து லங் கேன்சரால் இறந்து போன அந்த மனிதன் வரலாற்றில் நிற்கும் சாதனைகளை படைத்து சென்றிருக்கிறான்

ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு கோச்சாக பொறுப்பேற்று நாடெங்கும் அலைந்து கால்பந்தாட வீரர்களை திரட்டுவதில் படம் தொடங்குகிறது.
இறுதியாக ஆசிய கோப்பையை வெல்வதில் படம் நிறைவு பெறுகிறது.

கோச்சாக அஜய் தேவ்கன் லைஃப் டைம் ரோல் அசத்தியிருக்கிறார். அவரது மனைவியாக பிரியாமணி அந்தகாலத்திய அடக்கமான மனைவியை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

கால்பந்தாட்ட வீரர்களாக நடித்த 16 பேரும் அட்டகாசம் அதே முக ஜாடையில் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல், அவர்களை வைத்து ஒவ்வொரு மேட்சையும் மீண்டும் உருவாக்கியிருப்பது அற்புதம்.

ஒவ்வொரு ஷாட் ஒவ்வொரு காட்சியிலும் பெரும் முதிர்ச்சி தெரிகிறது. இயக்குநர் விளம்பர இயக்குநராக இருந்த அனுபவம் திரையில் தெரிகிறது. அமித் சர்மாவிற்கு இந்தப்படம் பெரிய அளவில் பெயர் சொல்லும் படமாக இருக்கும். இடைவேளை வரைக்கும் தடுமாறுன படம் இடைவேளைக்கு அப்புறம் தீப்பிடிச்ச மாதிரி ஓடுகிறது.
அதுவும் கடைசி அரை மணி மீயூசிக் கேமரா எடிட்டிங் எல்லாமே அட்டகாசம். ரஹ்மான் கால்பந்தாட்டாத்தை விறுவிறுப்பாக்கியதோடு அந்த உணர்வுகளை கடத்தியிருக்கிறார்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிஸ் பண்ணக்கூடாத ஸ்போர்ட்ஸ் படம்