16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

தமிழ் சினிமாவை மண் மணம் வீசும் கிராமத்து வாழ்வியலுக்கு எடுத்து சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் சகாப்தம் தொடங்கிய 16 வயதினிலே திரைப்படம் இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் ஆகுது. கோலிவுட்டில் முதன் முதலில் என்ற வார்த்தையை பல்வேறு விஷயங்களில் செஞ்சு காட்டிய படம்தான் 16 வயதினிலே. அந்தக் காலத்துலே நம் தமிழ் சினிமாக்கள் அம்புட்டு, ஷூட்டிங்கும் அரங்குகளிலேயே எடுக்கப்பட்டு வந்துச்சு. அப்பாலே அந்த அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முறையாக முழுப்படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றால், அது 16 வயதினிலேதான்.இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமிப்பா பேசப்பட்டுச்சு. ‘இதெப்படி இருக்கு?’ என்று காட்சிக்குக் காட்சி இவர் சொல்லும் வசனம்... பஞ்ச் வசனம்... ரஜினி பஞ்ச் வசனம் பேசிய வகையிலும் முதல்படம். ஸ்ரீதேவி அப்படியொரு அழகு தேவதையாக நாயகியானதும் இதுவே முதல் படம். எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகையாக இருந்தாலும் காந்திமதிக்கு அப்படியொரு நடிகையாகக் கிடைத்த…
Read More
நவரச நாயகன் கார்த்திக் பர்த் டே!

நவரச நாயகன் கார்த்திக் பர்த் டே!

கோலிவுட்டோ, பாலிவுட்டோ எல்லா சினிமா உலகிலும் எம்புட்டோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மாத்திரமே தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனசில் நீங்கா இடம் பிடிச்சிருக்காய்ங்க. அவர்களில் முக்கியமான நடிகர் நவரச நாயகன் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும் பிற்காலத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். துறுதுறு சிட்டி பாய், கிராமத்து இளைஞன், அப்பாவி, சீரியஸ் கேரக்டர், காமெடி ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடை, உடை, பாவனை, தோரணை என அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தக்கூடிய அசாத்திய திறமை கொண்ட நடிகரிவர் இதுவே இவரது வெற்றிக்கு சான்று. கொஞ்சூண்டு விரிவா சொல்றதானா முத்திரை என்பது சினிமாவில் மிக எளிதாகச் செஞ்சிடும் காரியம். இரண்டு மூன்று படங்களிலேயே ‘இந்த நடிகர் இப்படி நடிப்பதற்கானவர்’ அப்படீன்னு முத்திரை குத்திப்புடுவாய்ங்க ரசிகர்கள். ஆனால், அவரை ‘அமுல்பேபி’ என்று கொண்டாடிக்…
Read More
சினிமாவில் ஒரு சிற்றரசர் என்று வர்ணிக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம்!

சினிமாவில் ஒரு சிற்றரசர் என்று வர்ணிக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம்!

கல்கத்தாவிலும், பம்பாயிலும் கோலாப்பூரிலும் மட்டும் இயங்கி வந்த இந்திய சினிமாவை சேலம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைச்சவர் இந்த ‘செல்லுல்லாய்ட் சீமான்’. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 150 படங்களைத் தயாரிச்சவர். 55 படங்கள் இயக்கியவர். 40 ஆண்டுகள் இடைவிடாமல் இயங்கிச் சாதனை படைத்த அவர்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய டி.ஆர். சுந்தரம். “முதலாளி” அப்படீன்னு முன்னணி நட்சத்திரங்களாலும் ஸ்டூடியோ தொழிலாளர்களாலும் நிஜ அன்போடும் அழைக்கப்பட்ட சுந்தரத்தின் சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘திரைப்படத் தயாரிப்பு முறை என்றாலே ஹாலிவுட்டுக்கு இணையாக யாருமில்லை’ என அங்கலாய்ப்பவய்ங்க நாற்பதுகளில் வாழ்ந்திருந்தால் அப்படிக் கேட்க வாய்ப்பே இல்லை. ஹாலிவுட்டுக்குச் சற்றும் குறையாத முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பிரம்மாண்ட ஸ்டூடியோவை இயற்கை எழில் சூழ்ந்த சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் அமைச்சாரிவர். அங்கே ஷூட்டிங் ஃப்ளோர் , பாடல் ஒலிப்பதிவுக்கூடம்,…
Read More
எம்.ஜி.ஆர் . நடித்த நாடோடி மன்னன் ரிலீஸான நாளின்று!

எம்.ஜி.ஆர் . நடித்த நாடோடி மன்னன் ரிலீஸான நாளின்று!

எம்.ஜி.ஆர் நடிச்ச நாடோடி மன்னன் படத்துக்கான அப்போதைய பட்ஜெட் ஜஸ்ட் ரூ.18 லட்சம். ‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’ அப்படீன்னு ஓப்பனா அறிவிச்சுப்புட்டு படத்தை ரிலீஸ் செஞ்சார் எம்.ஜி.ஆர். படம் மெகா ஹிட். கூட்டம் கூட்டமாக பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி தீர்த்தாய்ங்க ரசிகர்களுங்க. உலகம் முழுவதும் 23 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி புதிய சாதனையை படைச்சுது. அத்துடன் 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கண்டுச்சு. அப்பவே நெசமா ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி கொட்டிக் கொடுத்துச்சாம். இந்தப் படம்.எம்.ஜி.ஆருக்கும் தமிழ் சினிமாவுக்கும் திருப்புமுனை தந்த இந்தப்படம். அதே சமயம் நாடோடி மன்னனின் வெற்றியை திமுக தனது சொந்த வெற்றியாகக் கொண்டாடிச்சு. 1958 அக்டோபர் 16 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்ட கூட்டத்தில் திமுக தலைவர் அண்ணாதுரை எம்ஜி ராமச்சந்திரனுக்கு தங்க வாள் பரிசளிச்சார். இதனை பிறகு எம்ஜி…
Read More
அவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) நினைவு நாள்!

அவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) நினைவு நாள்!

இன்றைய கோலிவுட் என்னும் ஆலமர விருட்சத்தின் ஆரம்பகாலமென்பது ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் வளர்ந்தது,, அந்த ஏவிஎம்-மை உருவாக்கிய மெய்யப்ப செட்டியார் இந்த ஸ்டுடியோவை சென்னையில் தொடங்கி, பின் தேவகோட்டையில் சிறிது காலம் இயங்கி, மீண்டும் சென்னைக்கே வந்த கதை சுவாரஸ்யமானது. ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்காக முதலீடு செய்வதற்கும் தயங்காதவர். ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் 'ஏவி அண்டு சன்ஸ்' என்ற பெயரில் இசைத் தட்டுகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அதை பெரிய அளவில் விரிவு படுத்தினார். 1932-ல் தென்னிந்தியா முழுவதற்கும் விற்பனை உரிமையைப் பெற்றார். சிறிய ஊரில் இருந்து பெரிதாக சிந்தித்தவர். அதன் பின் சென்னையில் சிவம் செட்டியார், நாராயண அயங்கார் என்ற இருவரை சேர்த்துக் கொண்டு 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓடியன் கிராமபோன் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து வியாபாரத்தை…
Read More
ஹேப்பி பர்த் டே சூர்யா!

ஹேப்பி பர்த் டே சூர்யா!

"அவள் வருவாளா" என கைகளை குவித்து காதலியை அழைக்க கூட சரியாக வராது தடுமாறினார் சரவணன் எனும் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் ஒளிப் பதிவாளர் 'கே.வி ஆனந்த்' பேட்டியொன்றில் " சத்தியமாக இந்த பையன் எல்லாம் பணக்கார நடிகர் வீட்டுல பொறந்துட்டு வராத நடிப்பை செய்யறேன்னு வந்துட்டு ஏன் நம் உயிரை வாங்கறானுக...னு தா நினைச்சேன்." என பேசியிருந்தார். சூர்யாவுடன் ஜோடி போட்ட சிம்ரனுக்கும் கிட்டதட்ட (விஐபி லேட் ரிலீஸ்) அது முதல் படம் தான் எனினும் சிம்ரன் தன்னுடைய பெர்பாமன்சில் வெளுத்து வாங்கியது வேறு சூர்யாவை தியேட்டர்களில் கேலி பொருளாக்கி யிருந்தது. மணிரத்னமின் பேனர், உடன் நடித்த விஜயின் மாஸ், அட்டகாசமான பாடல்கள், வசந்தின் ஜனரஞ்சக இயக்கம் அனைத்துமாக இணைந்து படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி விட்டன. சூர்யா தமிழகத்துக்கு அறிமுகமாகினார். சிவக்குமாரின் "உள்ளத்தை அள்ளித்தா ஜெய்கணேஷ்" தனமான மிலிட்டரி வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை இது என்பது சூர்யாவின் ஆரம்பகால…
Read More
நெல்லை மண்ணின் மைந்தனான டி.எஸ்.பாலையா பிறந்த நாள்!

நெல்லை மண்ணின் மைந்தனான டி.எஸ்.பாலையா பிறந்த நாள்!

T.S.பாலையா..one and only...! "அசோகரு நம்ம மகருங்களா?"...என்று கேட்கும் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் ஆகட்டும், பிலிப்பைன்ஸ் போயிருக்கான் என்று சொன்னால், "என்னது புலிகிட்ட பேசிட்டு இருக்கானா"?ன்னு தனக்கு தோன்றியதை கேட்கிற ஊட்டிவரை உறவு, வேதாசலம் ஆகட்டும்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் வித்தியாச வித்தியாசமான தொழிலதிபர் வேடங்களில் பாலையா நடித்தார் என்பதைவிட, அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தார்.காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் சீன் எவ்வளவு பிரபலமோ, அதற்கு நிகரானது ஊட்டிவரைஉறவு படத்தில் காதலியை பற்றி சொல்ல ஆரம்பித்த மகன் சிவாஜியை ஒட்டியபடியே பாலையா செய்யும் அட்டகாசம். அந்த காட்சியையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா உண்மையிலேயே பேரதிஷ்டம் செய்த ஒன்றுதான் என்று தோன்றும்.. பாலையாவின் நடிப்பை வில்லன், குணச்சித்திரம் என இருகூறுகளாக போட்டால் அதில் எது அட்டகாசம் என்பது கண்டுபிடிப்பது கஷ்டம்.,’ எம்கேடி பாகவதர்-பியு சின்னப்பா சகாப்தத்தில் துவம்ம் செய்த பாலையாவை பலருக்கும் தெரியாது.1936 லிருந்து 1950 வரை, சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, மந்திரிகுமாரி என…
Read More
முதிய பிரம்மச்சாரி ஆக்டர் எஸ். சூர்யாவுக்கு 56வது ஹேப்பி பர்த் டே💐

முதிய பிரம்மச்சாரி ஆக்டர் எஸ். சூர்யாவுக்கு 56வது ஹேப்பி பர்த் டே💐

டைரக்டராக முதல் இரண்டு படங்களிலேயே அழுத்தமான தடம் பதிச்சு ஹீரோவா நடிக்கத் தொடங்கி முதலில் வெற்றி பிறகு தொடர் தோல்வி ஒரு இடைவெளிக்குப் பிறகு துணை நடிகரா ரீ எண்ட்ரீ . வில்லனாக பதவி உயர்வு. மறுபடிம் நாயகனாக வெற்றிப் படங்கள் என்று ஏற்றம், இறக்கம் மீண்டும் படிப்படியாக முன்னேற்றம் என்று சூர்யாவின் திரைப்பயணம் அவருடைய திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யமானது, தன்னுடைய நடிப்புப் பயணம் பற்றிப் பேசும்போது இலக்கை நோக்கிய பயணத்தில் எது கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டுமே தவிர நான் இதைத்தான் செய்வேன் அதைத்தான் செய்வேன் என்று காத்துக்கொண்டிருந்தால் முன்னேறவே முடியாதுன்னு சொன்னார், 1966இல் அப்போதைய நெல்லை டிஸ்டிரிக்கான வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பிறந்தவர். அவரது நிஜப் பெயர் எஸ். ஜஸ்டின் செல்வராஜ். சினிமாவுக்காக எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்றபோதிலும் அப்பா ஆடியோ கேசட் கடை வைத்து நடத்திவந்துள்ளார். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை…
Read More
இயக்குனர் பாரதிராஜாவின் 83ஆவது பிறந்தநாள் இன்று 💐

இயக்குனர் பாரதிராஜாவின் 83ஆவது பிறந்தநாள் இன்று 💐

இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.)🥰 அல்லிநகரம் என்றொரு வில்லேஜில் பிறந்து கோலிவுட் சினிமாவின் ஆளுமையாக மாறிய இந்த மாபெரும் கலைஞன், ஒரு டிரெண்ட் செட்டராகவும் திகழ்ந்து வருகிறார். ஸ்டூடியோக்களுக்குள் சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி படையெடுக்க வைத்தவர் பாரதிராஜா தான். இன்று உச்சத்தில் இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் இவரின் படங்கள் தான் முன்மாதிரியாக இருக்கின்றன. ”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …" இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக இன்றைக்கும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று. மாறி வரும் காலச்சூழலில், தொலைந்து கொண்டிருக்கும் தமிழர் நாகரீகத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காட்டக்கூடிய வரலாற்று பொக்கிஷங்களாக பாரதிராஜாவின் படங்கள் உள்ளன. மண்வாசனையின் சொந்தக்காரரான இவர், தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியலை…
Read More
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நினைவு நாள்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நினைவு நாள்!

முன்னொரு காலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள். மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினார்கள் மக்கள். அவர்... எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன். இசைக்கு தலையாட்டலாம். ஆனால் அந்த உணர்வை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ளமுடியாது என்பதாகவே திரையிசையும் அந்தக் காலத்தில் இருந்தது. எப்பேர்ப்பட்ட பாட்டாக இருந்தாலும் அதில், கர்நாடக சங்கீதத்தின் சாரமும் தாக்கமும் நிறைந்திருக்க, பாட்டைக் கேட்டு ரசித்தார்களே தவிர, அதை ராகம் பிசகாமல் சேர்ந்து பாடமுடியாத நிலைதான் இருந்தது. பிறகு அதை உடைத்து, எல்லோருக்குமான இசையாக மாறியதுதான் தமிழ் சினிமா இசையின் ஆரம்பம்.…
Read More