எம்.ஜி.ஆர் நடிச்ச நாடோடி மன்னன் படத்துக்கான அப்போதைய பட்ஜெட் ஜஸ்ட் ரூ.18 லட்சம். ‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’ அப்படீன்னு ஓப்பனா அறிவிச்சுப்புட்டு படத்தை ரிலீஸ் செஞ்சார் எம்.ஜி.ஆர். படம் மெகா ஹிட். கூட்டம் கூட்டமாக பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி தீர்த்தாய்ங்க ரசிகர்களுங்க. உலகம் முழுவதும் 23 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி புதிய சாதனையை படைச்சுது. அத்துடன் 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கண்டுச்சு. அப்பவே நெசமா ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி கொட்டிக் கொடுத்துச்சாம். இந்தப் படம்.எம்.ஜி.ஆருக்கும் தமிழ் சினிமாவுக்கும் திருப்புமுனை தந்த இந்தப்படம். அதே சமயம் நாடோடி மன்னனின் வெற்றியை திமுக தனது சொந்த வெற்றியாகக் கொண்டாடிச்சு. 1958 அக்டோபர் 16 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்ட கூட்டத்தில் திமுக தலைவர் அண்ணாதுரை எம்ஜி ராமச்சந்திரனுக்கு தங்க வாள் பரிசளிச்சார். இதனை பிறகு எம்ஜி ராமச்சந்திரன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு தானமாக அளிச்சுட்டார். நாடோடி மன்னனின் 100 வது நாள் வெற்றி விழா 1958 நவம்பர் 30 மதுரையில் நடந்த அதேநாள் சென்னையில் அண்ணாதுரை தலைமையில் நடந்துச்சு. அந்த நிகழ்வில் எம்ஜி ராமச்சந்திரனை தனது இதயக்கனி என்றார் அண்ணாதுரை. அப்படி அன்றிலிருந்து எம்ஜி ராமச்சந்திரன் இதயக்கனி எம்ஜி ராமச்சந்திரனானார். அந்த நாடோடி மன்னன் இதே நாளில்தான் (ஆக.22.1958) வெளியாகி. 66 வருடம் முடிந்து 67-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.
நம்ம எம்ஜிஆர் தன்னோட கோலிவுட் ழ்க்கையில் அடிப்படை மாற்றங்களை எப்படியெல்லாம் கண்டடைஞ்சார் என்பதை தெரிஞ்சால் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இன்றும்கூட அவை வியப்பாகவே இருக்கும்.அப்போது எம்ஜிஆர் நாடக மன்றத்தை அவர் உருவாக்கியிருந்த நேரம். அப்போதே எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்ற சொந்தப் பட நிறுவனத்தையும் தொடங்கிபுட்டார். முன்பு பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்த ‘உத்தம புத்திரன்’ படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும். அதில் தானும் இரட்டை வேடங்களில் நடிக்கவேண்டும் என்று எம்ஜிஆருக்கு ஆசை. அது 1950-களின் நடுப்பகுதி. எம்ஜிஆர் நடிக்கும் ‘உத்தம புத்திரன்’ படம் குறித்த விளம்பரம் முன்னணி நாளிதழில் வெளிவந்துச்சி. அதேநாளில் அதே பத்திரிகையில் இன்னொரு விளம்பரமும் இருந்துச்சு. நடிகர் திலகம் சிவாஜி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘உத்தம புத்திரன்’ படத்தின் விளம்பரம் தான் அது. ஏற்கெனவே 1940-ல் பி.யு.சின்னப்பாவை வைத்து ‘உத்தம புத்திரனை’ எடுத்திருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திடம் அந்தத் திரைக் கதையின் உரிமையை வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி இருந்தாய்ங்க. அவிய்ங்கதான் சிவாஜியை வைச்சு ‘உத்தம புத்திரனை’ எடுக்கிறார்கள் அப்பட்டீன்னு தெரிஞ்சதும் அந்தப் போட்டியிலிருந்து விலகிக்கிட்டார் எம்ஜிஆர். என்றாலும் இரட்டை வேடத்தில் படமெடுக்கும் திட்டத்தை எம்ஜிஆர் கைவிடலை.
அவர் ஆசைக்காக ‘பிரிசனர் ஆஃப் ஜென்டா’ (1937) என்ற படத்தின் கதையையும் ‘இஃப் ஐ வேர் கிங்’ (1938) என்ற படத்தின் கதையையும் ‘விவா ஜபட்டா’ (1952) என்ற படத்தின் கதையையும் கலந்து ஒரு அற்புதமான திரைக்கதையை -எம்ஜிஆருக்காகவே உருவாக்கினாய்ங்க எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவினர். அதுதான் ‘நாடோடி மன்னன்’.ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோர் அப்போது எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் இருந்தவய்ங்க. இவிய்ங்களுக்கு உதவியாக இருந்த ரவீந்தரும் கவியரசு கண்ணதாசனும் வசனமெழுதுவது என்று முடிவாச்சு. ‘நாடோடி மன்னனை’ இயக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட டைரக்ட்ர் அந்தப் பணியில் இணைய முடியாமல் போயிடுச்சு. உடனே எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி உறுதியாகச் சொன்னார்: “இந்தப் படத்தைத் தம்பி எம்ஜிஆர் இயக்கினால் செய்யட்டும். இல்லையென்றால் ‘நாடோடி மன்னன்’ படமே வேணாம்!”. ஆனா இதை மறுத்து எம்ஜிஆர் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். இறுதியில் வேறு வழியே இல்லாமல் ‘நாடோடி மன்னன்’ படத்தை டைரக்ட் செய்ய எம்ஜிஆர் ஒத்துக்கொண்டார். படத்தில் அவருக்குச் ஜோடி பானுமதி. நம்பியார், எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எம்.என்.ராஜம் ஆகியோரும் இதில் நடிச்சாய்ங்க. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைஸ்ஸாஆர். படத்தில் இன்னொரு எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவியை ஒப்பந்தம் செஞ்சாய்ங்க. சரோஜாதேவியை முதன்முதலில் எம்ஜிஆருக்கு அறிமுகம் செய்துவைத்தவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். இவரை எம்ஜிஆர் தனது குருவாக மதித்தார். அதனால் அவரின் சிபாரிசு சரோஜா தேவிக்கு உடனே க்ளிக் ஆயிடுச்சு.(சினிமா பிரஸ் கிளப்)
முதல் கதாநாயகி பானுமதிக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அதனால் பாதி படத்திலேயே அவர் வெளியேறிவிட்டார். படத்தின் கதையில் பானுமதி முதுகில் குத்தப்பட்டு வீழும் காட்சிதான் கடைசியாக எடுக்கப்பட்டது. கதையின் போக்கிலும் அவர் இறப்பதாக இருந்ததால் அத்துடன் அவரது பகுதியை முடிச்சுப்புட்டாய்ங்க. பின்னாளில், தான் தமிழ்நாட்டை ஆளப்போவதை மனதில் வைத்தே ‘நாடோடி மன்னன்’ படத்தை எடுத்ததுபோல படத்தில் எம்ஜிஆரின் கேரக்டர் அமைஞ்சு போனது தற்செயலானதுதான். எம்ஜிஆர் பிக்சர்ஸ் சின்னத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கைகளில் திமுக கொடியைப் பிடித்திருப்பதுபோல வடிவமைச்சார் எம்ஜிஆர். திரையில் அதைக் காட்டும்போது ‘செந்தமிழே வணக்கம்’ என்ற சுரதாவின் பாடல் பின்னணியில் ஒலிக்கும். ‘பார்புகழும் உதய சூரியனே… பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே…’ என்று அந்தப் பாடலின் இறுதி வரிகள் இயம்பின.
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தை எம்ஜிஆரிடம் அழைத்து வந்தவரும் வீரப்பன்தான். மூத்த இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தரையிலமர்ந்து பட்டுக்கோட்டையார் ஒரு பாடலைப் பாடிக்காட்டிக் கொண்டிருந்தாராம். “வீரப்பா… இவரை நல்லாப் பார்த்துக்க… அருமையாகப் பாட்டெழுதுகிறார்,” என்று அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கே பட்டுக்கோட்டையார் பாடிக்காட்டிய “காடு வெளஞ்சென்ன மச்சான்…” என்ற பாடல் வீரப்பனுக்குப் பிடித்துப் போயிடுச்சுறு. அவரை அழைத்து வந்து எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்தி வைக்க, அப்பாடல் நாடோடி மன்னனில் இடம் பெற்றுச்சு.
இதனிடையே எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சக்கரபாணியையும் எம்ஜிஆரையும் பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனம். அது பிற்பாடு எம்ஜிஆர் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் என்று மாத்திக்கிட்டாய்ங்க. இதற்குப் பல்வேறு வருமான வரிக் காரணங்களும் இருந்துச்சு. இவ்விரு நிறுவனத்திற்கும் ஆர் எம் வீரப்பனே மேனேஜர். அதே சமயம் இரண்டாவது நிறுவனத்தில் வீரப்பனுக்குப் பத்துப் பர்செண்ட் பங்குகளையும் கொடுத்திருந்தார். இதனால் நிறுவனத்தின் ஆவணங்களில் அவரும் கையெழுத்திடும் ரைட்ஸ் இருந்துச்சு. அந்த வகையிலே நாடோடி மன்னனுக்கு வேண்டிய பணத்திற்கான ஏற்பாடுகளை வீரப்பனே முழுமையாய்ச் செஞ்சார். பணத்திற்கான ஏற்பாடுகளைக் குறித்த எத்தகைய கவலையும் எம்ஜிஆருக்கு ஏற்படாதபடி அவர் பார்த்துக்கொண்டார். அதனால்தான் எம்ஜிஆரால் முழு மூச்சுடன் படவேலைகளில் ஈடுபட முடிஞ்சுது.
நாடோடி மன்னனுக்குப் பல்வேறு வெளியீட்டு நாள்கள் அறிவிக்கப்பட்டு அப்படி. அறிவிக்கப்பட்ட நாள்களில் அப்படத்தை வெளியிடவே முடியலை. ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வேறு படங்கள் அனைத்தையும் எம்ஜிஆர் ஒத்தி வைத்திருந்தார். அப்போது படச்சுருளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவிச்சு. ஒரு சுருளின் உண்மை விலை எழுபத்தைந்து ரூபாய் என்றாலும் அது பிளாக் மார்க்கெட்டில் நானூற்றைம்பது வரை விற்பனையாயிற்றாம். இப்படிப் பல்வேறு ரூபங்களில் செலவு கூடிக்கொண்டே போச்சு. அதனால் படத்தயாரிப்புக்குப் போதிய பணத்தைப் புரட்டவே முடியலை. அப்போ ஏகப்பட்ட வணிக உத்திகளைக் கையாண்டு நிலைமையை ஓரளவுக்குச் சமாளிச்சார் வீரப்பன். ஒரு கட்டத்திற்கு மேல் ஏவியெம் மெய்யப்பச் செட்டியாரிடமே சென்று கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. அங்கேயோ நாடோடி மன்னனைப் போன்ற கதையமைப்பிலேயே அங்கே ‘உத்தமபுத்திரன்’ தயாராகிக்கொண்டிருந்துச்சு. ஆனாலும், வீரப்பனால் தம் படத்திற்குப் பணம் கேட்க அங்கே போக முடிஞ்சுது ன்னா அப்போ இந்த கோலிவுட் வணிகத்தில் நிலவிய ஆரோக்கியமான போக்கை எண்ணி வியக்கலாம். இப்போ தமது படத்தைப் போன்றே ஒரு படம் உருவாகிறது என்றால் அதற்கு என்னென்ன முட்டுக்கட்டைகளைப் போட இயலுமோ அத்தனையையும் போடுவாய்ங்க இல்லையா?.(சினிமா பிரஸ் கிளச்ப்)
அப்போ ஏ வி எம்மில் சீஃப் அக்கவுண்டெண்ட் எம்.கே. சீனிவாசன் என்பவர் தலையசைத்தால் மட்டுமே மெய்யப்ப செட்டி பணம் கொடுப்பார். சீனிவாசனோ எம்ஜிஆரின் கையெழுத்து வேண்டுமென்கின்றார். ஆனா படத்தயாரிப்பு நிறுவனத்தின் எல்லாக் கடிதங்களும் வீரப்பனின் கையொப்பத்திலேயே நடந்திருக்கின்றன என்று அவற்றை வீரப்பன் காண்பிக்க அவர் வீரப்பனின் இன்வால்மெண்டையும், கமிட்மெண்டையும் வியந்து பாராட்டிப்புட்டார். அப்போ வீரப்பனுக்கு வயது முப்பத்தொன்று மட்டுமே. அடுத்த அறையில் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மெய்யப்பன் எழுந்து வந்தார். இம்புட்டு சின்ன வயசிலே முதலாளிக்கு ரொம்ப உண்மையாய் இருக்கும் அவரைப் பார்த்து மெய்யப்பன் பாராட்டினாராம். பிறகு ஏவியெம்மின் கடனுதவி பெறப்படுது.
ஆனாலும் நாடோடி மன்னன் லேட் ஆகிகிட்டே இருந்த சூழலில், உத்தமபுத்திரன் ரிலீஸாகிடுச்சு. எம்ஜிஆரும் வீரப்பனும் முதல்நாள் முதற்காட்சியே பார்த்தாய்ங்க. படம் அருமையாக எடுக்கப்பட்டிருந்துச்சு. ஆனால், செலவிட்ட தொகைக்கு நிகரான வரவேற்பு இருக்கலை. இது எம்ஜிஆரைக் கவலை கொள்ளச் செஞ்சிடுச்சு. தம் படத்திற்கும் அவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது-ன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டார். அதனால் மத்தவய்ங்க அட்வைஸை ஏற்கும் மனநிலைக்கு எம்ஜிஆர் வந்துட்டார். நாடோடி மன்னனில் இரண்டு எம்ஜிஆர்களும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி எடுக்க பிளான் இருந்துச்சு. அக்காட்சிக்கு பெரிய அரண்மனை செட் வேண்டும். குதிரையிலமர்ந்தபடி சண்டையிட்டவாறே படிகளில் ஏறி இறங்க வேண்டும். அது சரியாகவும் வராது, தேவையற்ற செலவும்கூட அப்படீன்னு வீரப்பன் சொன்னார். ஆனால், எம்ஜிஆர் அக்காட்சியை எடுப்பதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் “எம்ஜிஆரும் எம்ஜிஆரும் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்வையாளர்கள் விரும்பமாட்டார்கள். எம்ஜிஆர் தீயவர்களோடு மோதுவதைத்தான் விரும்புவார்கள்…” என்று வீரப்பன் கூற அதை ஏற்றுக்கொண்டார். அதன்படி நம்பியாரோடு சண்டையிடும் காட்சியாக அது மாற்றப்பட்டுச்சு.
அப்படி ஒவ்வொரு சீனையும் யும் மிகவும் சிரத்தையுடன் செதுக்கினார் எம்ஜிஆர். படத்தை வெளியிடுதற்கு முன்பாக எம்ஜிஆர் சொன்னார்: “இந்தப் படம் வெற்றிபெற்றால் நான் மன்னன், தோல்வியடைந்தால் நான் நாடோடி”. 1958 ஆகஸ்ட் 22-ல் ‘நாடோடி மன்னன்’ வெளிவந்து எம்ஜிஆரை மன்னனாக்கியது. திரைத்துறை, அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் என்ற தனிப்பெரும் அடையாளத்தை நிறுவியது இந்தப் படம். நாடோடி மன்னன்’ வெற்றி எம்ஜிஆரையே திக்குமுக்காடச் செய்தது என்பதே உண்மை.‘பார்த்தவர்களைத் திரும்பத் திரும்ப பார்க்கும்படி செய்துவிடும் இத்திரைப்படம்’ என்று அப்பள கம்பெனி ஆகிட்ட ஆனந்த விகடனில் திரை விமர்சனம் வெளியாச்சு. தேனி மாவட்டத்தில் சிலர் ரத்த தானம் செய்து அந்த பணத்தில் படம் பார்ப்பதாகத் தகவல் வெளியானது. உடனே, ‘படம் பார்ப்பதற்காக காசு வேண்டுமென்றால் எனக்கு கடிதம் எழுதுங்கள், நான் அனுப்புகிறேன்’ என்று பத்திரிகைகளில் பதிலளித்தார் எம்ஜிஆர்.சென்னையில் மட்டும் ஸ்ரீகிருஷ்ணா, பாரகன், உமா என்று மூன்று தியேட்டர்களில் இப்படம் 100 நாட்கள் ஓடியது. மாவட்டத் தலைநகரங்களில் இருந்த தியேட்டர்களிலும் இதே கதைதான்.இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்பட தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமாக உலகம் முழுவதும் 23 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிச்சுது ‘நாடோடி மன்னன்’.