11
Sep
ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, அமராவதி – அம்பிகாபதி, ஷாஜகான் – மும்தாஜ் ஆகிய காதலர்கள் வரிசையில் தேவதாஸ் – பார்வதி காதலர்களும் இணைந்துள்ளனர்.வரலாறு மற்றும் புராண காதல் ஜோடிகளோடு திரைப்படத்தில் வந்த ஒரு காதல் ஜோடியும் இணைத்து வைத்து பேசப்படுவது திரைப்படத்தின் வெற்றி மட்டுமல்ல அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்த கலைஞர் களின் வெற்றியுமாகும். 1953ம் ஆண்டின் வெளியான தேவதாஸ் படத்தின் கதாநாயகன் நாகேஸ்வர ராவ். இன்றைக்கும் யாராவது காதலில் தோல்வியடைந்து தாடி வைத்திருந்தால், என்ன பெரிய தேவதாஸ் என்று நினைப்போ என்று கேட்கப்படுகிறது. இவ்வாறு கேட்பவர் களில் பலர் தேவதாஸ் படத்தைக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் காதல் தோல்விக்கு அடையாளமாக தேவதாஸ் மாறிப் போய்விட்டான். தமிழ் சினிமாவில் காதல் தோல்வி படங்கள் எத்தனையோ வந்திருக் கின்றன. ஆனால் அத்தனைக்கும் மூலப் பிரதியாக விளங்குவது தேவதாஸ்தான். இந்த படத்தில் இடம் பெற்ற, ‘உலகே மாயம், வாழ்வே மாயம், நிலையேது…
