தமிழ் திரையில்  வில்லன் கதாபாத்திரத்திற்கு முதல் அடித்தளம் இட்ட எம்.என்.நம்பியார்!

தமிழ் திரையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு முதல் அடித்தளம் இட்ட எம்.என்.நம்பியார்!

தமிழ் திரையுலகத்தில் வில்லன் எனும் கதாபாத்திரத்திற்கு முதல் அடித்தளம் இட்டவர் எம்.என்.நம்பியார். திரையில் இவரை பார்க்கும் ரசிகர்கள் அவரை பொல்லாதவனாகவும் அநியாயம் அட்டூழியங்களை செய்யும் அரக்கனாகவும் பார்க்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பால் திரையுலக வரலாற்றில் வில்லன் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்த பழம் பெரும் வில்லன் நடிகன் அவர். அதிலும் எம்.ஜி.ஆருடன் இவர் சண்டையிடுவதை பார்த்து இவரை அடிக்க பாய்ந்து , சினிமா தியேட்டர்களில் உள்ள திரையைக் கிழித்த ரசிகர்களும் உள்ளனர். அவ்வாறு திரை உலகையே தன்வசப்படுத்தி யிருந்த வில்லன் எம்.என்.நம்பியார். இவர் கடந்த 1919 ம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில் இந்திய கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பெருவமூர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை கேளு நம்பியார் என்பவராவார் இவர் குடும்பத்தின் கடைசிக் குழந்தையாக பிறந்தார் எம்.என். நம்பியார் எனப்படும் மாஞ்சேரி நாராயணன் நம்பியார். இவரின் 8 வது வயதிலேயே அவரது தந்தை இறந்த நிலையில் அவர்…
Read More
மூன்றாம் பிறை ஸ்ரீதேவி-யும், ஊட்டி ரயில்வே ஸ்டேசனும்!

மூன்றாம் பிறை ஸ்ரீதேவி-யும், ஊட்டி ரயில்வே ஸ்டேசனும்!

ஊட்டியை ஸ்ரீதேவி நடித்த பல படங்களில் ஓர் ஊராகப் பார்க்கமுடியும். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை உள்ளிட்ட படங்கள் ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டவை. ஆனால் ஒரு படத்தின் காட்சி மட்டும் இன்றும்கூட ஊட்டி மக்களின் மனங்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அது பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி. மூன்றாம் பிறையின் பெரும்பாலான காட்சிகள் ஊட்டிக்கு அருகில் எடுக்கப்பட்டவை. மனம் கணக்கவைக்கும் க்ளைமேக்ஸ் காட்சி கேத்தி ரயில்வே நிலையத்தில் எடுக்கப்பட்டபோது, அந்தப் படப்பிடிப்பைப் பார்த்த அனுபவத்தை உள்ளூர் மக்களால் மறக்கமுடியவில்லை. நினைவுகளில் கரைபுரளும் சோகம். ஊட்டி ரயில் நிலையத்தில் தோட்டக்காரராகப் பணிபுகிறார் கேத்திக்கு அருகிலுள்ள உல்லாத்தி கிராமத்தைச் சேர்ந்த காக்கமல்லன், “மனதை உறையவைக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். எப்போதும் என் நெஞ்சத்தில் குடியிருக்கும் காட்சி அது. அந்த குறிப்பிட்ட காட்சியில் ஸ்ரீதேவிக்கு வசனங்கள் இல்லை. அதில் அவர் தனது…
Read More
நாகி ரெட்டி நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது..!

நாகி ரெட்டி நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது..!

தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளரும், விஜயா-வாஹினி ஸ்டூடியோஸின் நிறுவனருமான மறைந்த பெரியவர் பி.நாகி ரெட்டியின் நினைவாக அவரது தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.நேற்று மாலை சென்னை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு, நாகி ரெட்டி நினைவு தபால் தலையை வெளியிட்டார். மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நாகி ரெட்டி பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது. புத்தகத்தை தமிழகத்தின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இந்த புத்தகம் நாகி ரெட்டி அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின்  ஒரு தொகுப்பாகும். இந்த புத்தகத்தை நாகி ரெட்டியாரின் மகனான மறைந்த B.வேணுகோபால்  ரெட்டி அவர்களால் தொகுக்கப்பட்டது. விஜயா மருத்துவமனையின்  அறங்காவலரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாரதி ரெட்டி இந்த புத்தகத்தை  தொகுப்பதற்கு  உதவி செய்துள்ளார். விழாவில் துணை ஜனாதிபதி  வெங்கய்யா நாயுடு, தமிழ்ச் சமுதாயத்திற்கும், தென்னக சினிமாவிற்கும் நாகி ரெட்டி செய்த  செய்த பங்களிப்புகளை பற்றி உரையாற்றினார். மேலும்…
Read More
தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏ.பி.நாகராஜன்!

தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏ.பி.நாகராஜன்!

“கடைசிக் குடிமகனிலிருந்து உலககைக் காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” – இப்படிச் சொன்னவர் பரமசிவனின் மனைவி பார்வதி. அவரை இப்படி பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். “ஒருத்தி என் தலையிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்கமாட்டேங்குறா.. இன்னொருத்தி என் உடம்புல பாதியை எடுத்துக்கிட்டு பிராணனை வாங்குறா” என்று இருதார மணவாளரான பரமசிவனை புலம்பவைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான். இரண்டும் திருவிளையாடல் படத்தில் அவர் எழுதிய வசனங்கள். கொங்கு மண்டலத்தில் வளமான நிலவுடைமையாளர் குடும்பத்தில் 1928 இதே பிப்ரவரி 24ந் தேதி பிறந்தவர் அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் (ஏ.பி.நாகராஜன்). அவருக்கு வைக்கப்பட்ட பெயர், குப்புசாமி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள்தான் வளர்த்தார். அதனால் சின்ன வயதிலேயே புராண-இதிகாசக் கதைகளை கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது. அது அவரைக் கவர்ந்தது. அவ்வை டி.கே.சண்முகம்  நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கே நிறைய குப்புசாமிகள் இருந்ததால், அவரது பெயர்…
Read More
மறக்க முடியாத  மலேசியா வாசுதேவன்!

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!

80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். ஆனாலும் அப்போது "தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன் போலப் பாட யார் இருக்கிறார்?" என்று சிலபலர் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குத் தக்கதொரு பதிலாக வந்து சேர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன். ஆனாலும் அவர் டி.எம்.எஸ். மாதிரியும் பாடவில்லை, வேறு யார்போலவும் பாடவில்லை. அவர் அவர் மாதிரித்தான் பாடினார். கே.ஜே.ஜேசுதாஸ் சாயலில்தான் ஜெயச்சந்திரன் குரல் இருக்கிறது என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள். எஸ்.பி.பால சுப்பிரமணியம் குரலை உன்னிப்பாகக் கவனிப்பாருக்கு கண்டசாலா நினைவுக்கு வரவே செய்வார். பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலும்கூட ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ரகம்தான். இப்படிச் சொல்வதால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவருக் கான தனித்துவமே இல்லை என்பதாகாது. ஆனால், இந்த யாரின் சாயலும் இல்லாமல், இந்த யாரையும் விட தனது கம்பீரமான தனித்த குரலைத் தமிழ் சினிமாவில் நெடுங்காலத்துக்குப் பதிவு செய்தவர்…
Read More
‘மெர்சல்’ செய்துள்ள சாதனைகள் இம்புட்டா? – அதிர்ச்சியில் பாலிவுட்!

‘மெர்சல்’ செய்துள்ள சாதனைகள் இம்புட்டா? – அதிர்ச்சியில் பாலிவுட்!

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'. ஏ. ஆர்.ரஹ்மான் இசை யமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், இதுவரை செய்துள்ள சாதனைகள் என்ன என்பதை படக்குழு தெரிவித்திருக்கிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீஸர்களில் 'மெர்சல்' டீஸர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது . * டீஸர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது . * தென்னிந்திய அளவில் அனைவராலும் யூ டியூப்பில் பார்க்கப்பட்ட வீடியோக்களில் அதிகம் பேர் விருப்பம் பெற்ற வீடியோக்களில் 'மெர்சல்' படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. *அதிக அளவில் பார்க்கப்பட்ட பாடல் வரிகள் வீடியோ, அதிக அளவில் லைக் செய்யப்பட்ட பாடல் வரிகள் வீடியோ,…
Read More
‘மராட்டிய திரைப்பட மேதை’ வி.சாந்தாராம்!

‘மராட்டிய திரைப்பட மேதை’ வி.சாந்தாராம்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை என பல துறைகளிலும் தனிச் சாதனைப் ப்டைத்தவர் 'மராட்டிய திரைப்பட மேதை' வி.சாந்தாராம். மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் இதே நவம்பர் 18ம் தேதி பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சி யிலும் ஈடுபட்டுவந்தார். ஆனாலும் 1901-ல் கோல்காபூரில் இருப்புப் பாதை பராமரிக்கும் வேலையில் 15 ரூபாய் சம்பாதித்து வந்தார் இவர். இதுபோலவே தன்னுடைய 16-வது வயது வரை பல சில்லறை வேலைகளைச் செய்து வந்தார். எந்த வேலையைச் செய்தாலும் சினிமா பார்ப்பதை மட்டும் அவர் விடவே இல்லை. படங்களைப் பார்த்து அவராகவே நடிக்க ஆரம்பித்தார். அப்போது கோல்காபூரில் பாப்பு ராவுவால் ஆரம்பிக்கப்பட்ட மஹாராஷ்டிர சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார். அங்குதான் சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் முதலிய…
Read More
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்!

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்!

தமிழ் நாடகக் கலையின் தந்தை, தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்ட தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 95-வது நினைவு நாள் விழா இன்று புதுவையில் அனுசரிக்கப்படுது. இந்நிகழ்ச்சியை ஒட்டி ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சார்பாகவும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாகவும் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது சமாதிக்கு, ஏராளமானோர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று நடந்த விழாவில் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர் , பொன்வண்ணன் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என்று போற்றப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள். ஏறத்தாழ 30 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாகக்கொண்டு சுமார் 63 நாடகங்களை அரங்கேற்றியவர். மிகவும் பிரபலமான கலைஞர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, டி.கே.சண்முகம் சகோதரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களை…
Read More
கடைசி வரை கவரிமான் போல் வாழந்த ‘ தியாகராஜ பாகவதர்’

கடைசி வரை கவரிமான் போல் வாழந்த ‘ தியாகராஜ பாகவதர்’

மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதி யின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம். தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம். திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள்.…
Read More
பி. எஸ். வீரப்பா!

பி. எஸ். வீரப்பா!

எத்தனை பேருக்கு பி.எஸ்.வீரப்பாவை நினைவு இருக்கிறதோ தெரியவில்லை. இவர் அதிகமாக ஏற்று நடித்தது என்னவோ வில்லன் பாத்திரங்கள்தான். ஆனால் மிகை நடிப்பானாலும் அது அழுத்தமான நடிப்பின் பதிவு. அன்றைய கால கட்டத்தில் அத்தகைய அவரின் நடிப்புத்தான் திரையில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது. பி.எஸ்.வீரப்பா திரையில் சிரிக்க ஆரம்பித்தால் அரங்கில் இருக்கும் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள் என்று ஒரு நிலை இருந்தது. எம்ஜிஆரை வைத்து யாராவது அரச படம் தயாரிக்க முனைந்தால் முதலில் கூப்பிடு வீரப்பாவை எனும் நிலையில் அட்டகாசமான வில்லனாக எம்ஜிஆருக்குப் பொருந்தி இருந்தார். எத்தனையோ வில்லன்கள் எம்ஜிஆர் படங்களில் வந்து போனாலும், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா என்றோரு கூட்டு பலராலும் ரசிக்கப் பட்டிருந்தது. எம்ஜிஆர் , தனது கடைசிப் படமான ´மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்` படத்திலும் பி.எஸ்.வீரப்பாவுக்கு வில்லன் பாத்திரம் கொடுத்திருந்தார் என்பதில் இருந்து அது மேலும் உறுதியாகிறது. ´வஞ்சிக்கோட்டை வாலிபன்` என்றொரு திரைப்படம். ஜெமினி வாசன் தயாரித்தது.…
Read More