பாட்டு ராணி எல்.ஆர்.ஈஸ்வரி!

பாட்டு ராணி எல்.ஆர்.ஈஸ்வரி!

இப்பத்திய குத்துபாட்டு போன்ற துள்ளல் பாடல்களுக்கு ஆரம்ப காலத்தில் பேர்போனவர் பழம் பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. 'நல்ல இடத்து சம்மதம்' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், 1961ஆம் ஆண்டில் வெளியான 'பாச மலர்' படத்தில் பாடிய "வாரயென் தோழி.." என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். துள்ளல் பாடலுக்கு பேர் போனவராக இருந்தாலும், காதோடுதான் நான் பேசுவேன் என்ற மெல்லிசை பாடல்களையும் பாடி அசத்திய இவர் பாடிய மற்றொரு பாடலான "பட்டத்து ராணி.." என்ற பாடலை இந்தியில் பாடகி லத்தா மங்கேஸ்கர், "பாட கடினமாக இருக்கிறது இதை அவர் பாடியது போல என்னால் பாட முடியாது" என்று கூறினாராம். "முத்துக்குளிக்க வாரீகளா...", "புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை...", "ஆடவரரெல்லாம் ஆட வரலாம்...", "மலரென்ற முகம் என்று.." உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும், என்றும் இசைப் பிரியர்களின் மனதில் என்றென்றும் நிற்கும். அத்தகைய அற்புத இசையினை அளித்த எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழ், தெலுங்கு,…
Read More
நிஜ சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத / மறக்கக் கூடாத நடிகை சில் ஸ்மிதா!

நிஜ சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத / மறக்கக் கூடாத நடிகை சில் ஸ்மிதா!

1926 ஜூன் மாசம் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாஸ்பிட்டலில் பிறந்த குழந்தையோட பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , அரம்பத்தில் இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெரிய கனவு தேவதையாக வலம் வருவார் என்று யாருக்கும் தெரியவில்லை, சின்ன வயதில் பல்வேறு துன்பங் களுக்கும், பாலியல் வன்முறைக்கும், குடும்ப சூழல்களுக்கும் சிக்கிக் கொண்டவர் இவர், பதினாறு வயதில் திருமணம் முடித்து, அதற்கு பின் மாடலிங் துறையில் காலெடுத்து, தன் அழகாலும், தோற்றத்தாலும், கவர்ச்சியாலும் இந்த உலகை புரட்டிப் போட்டு இறந்த பின்னும் இன்று வரை நம் மனதில் மாறாது இருப்பவர் மர்லின் மன்றோ... இவரின் இறப்பு குறித்த மர்மங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது... 1960 , அந்த மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத் தில் விஜயலட்சுமி என்ற பெயரில் இதே டிசம்பர் 2 ம் தேதி ஒரு…
Read More
எம்ஜிஆர்., எம்.கே.ராதா & டி எஸ் பாலையாவை அறிமுகம் செய்த இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன்

எம்ஜிஆர்., எம்.கே.ராதா & டி எஸ் பாலையாவை அறிமுகம் செய்த இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன்

எல்லிஸ் ரோட்ரிக் டங்கன், இன்னிய யங் சினிமா ஆர்வலர்கள், வெறியர்கள் மற்றும் ட்விட்டர் பாய்ஸூகள் என பலதரப்பினரும் அதிகம் கேள்விப்படாத முக்கியமான சினிமா பிரபலம். சுருக்கமா எல்லிஸ் ஆர்.டங்கன் என்று அழைக்கப்படும் இவர், அமெரிக்காவைச் சேர்ந்தவர். நம்ம தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்த அசிஸ்டெண்டுகளைக் கொண்டே தமிழ் சினிமா உலகில் தனித் தன்மை கொண்ட, வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்வரிவர். அதிலும் சினிமாவில் நாடக பாணி எதிரொலிப்பதை மாற்றி, நடிகர்களின் முகபாவனை, உடல்மொழிகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் இவர். புரட்சி நடிகராகி பின்னர் புரட்சி தலைவரான எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவரும் இவரே. ஆம்.. தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர், நடிகராக அறிமுகமான முதல் படம் ‘சதிலீலாவதி’. இதை இயக்கியவர்தான் டங்கன். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘மந்திரி குமாரி’ படத்தை இயக்கியவரும் இவரே! அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் மிடில் கிளாஸ்…
Read More
அவள் அப்படித்தான் புகழ் ‘ருத்ரையா’

அவள் அப்படித்தான் புகழ் ‘ருத்ரையா’

தமிழ்த் திரையுலகம் மறந்தாலும், நல்ல சினிமாவை விரும்புகிறவர்களால் மறக்க முடியாத பெயர் – இயக்குநர் ருத்ரையா காலமான நாளின்று. ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் யாருக்கும் இல்லாத பெருமை ருத்ரையாவுக்கு உண்டு.. அது என்னன்னா இவர் தன் வாழ் நாளில் இயக்கியதே ரெண்டே படங்கள்தான். அதில் ஒன்று உலக சினிமாக்களின் பெஸ்ட் -களில் இடம் பிடித்திருப்பதுதான். ஆம்.. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியாவின் திரையுலக வாழ்க்கையிலும் மிக முக்கியமான படம் – அவள் அப்படித்தான். சென்னை பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் பயின்றுவிட்டு, பாலச்சந்தரின் உதவியாள ராகவும் இருந்த ருத்ரையா இயக்கிய முதல் படம் இது. 1978 ஆம் ஆண்டு தீபாவளி அன்று அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே கமலஹாசன் நடித்த படங்கள். இவற்றில் சிவப்பு ரோஜாக்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சிவப்பு ரோஜாக்கள் படத்தின் வெற்றியில் அவள் அப்படித்தான் என்ற படம்…
Read More
காதல் மன்னன் ஜெமினி கணேசன்’

காதல் மன்னன் ஜெமினி கணேசன்’

இப்போ யார், யாரையெல்லாமோ ப்ளே பாய், சாக்லேட் பாய், ஹேண்ட்ஸம் லுக் அப்படீன்னு அடைமொழி போட்டு கூப்பிடறாங்களே அதுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த ரொமான்ஸ் பர்சனுக்கான வார்த்தை காதல் மன்னன் என்பது.இப்பத்திய ஜெனரேஷன்களுக்கு தெரிஞ்ச அரவிந்த்சாமி, அஜித், அப்பாஸ், மாதவன் போன்றோர் பெண்களின் சாக்லேட் பாய்ஸ் என்று வர்ணிக்கப்பட்டாலும் அவர்களுக்கெல்லாம் சீனியராக இருந்தவர் காதல்மன்னன் ஜெமினி கணேசன் என்றால் மிகையல்ல. ஆனாலும் ஜெமினி கணேசனை வெறும் காதல் மன்னனாக மட்டுமே தமிழ்த் திரை உலகம் இதுநாள் வரை சித்திரித்திருக்கிறது. உண்மையில், ஜெமினியின் ஆளுமை பன்முகப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையுமே திகைக்க வைத்த போட்டியாளர் இவர். ஸ்டைல், நடிப்பு என்று ஆளுக்கொரு திசையில் கொடிகட்டிப் பறந்தபோது, தனக்கென்று ஓர் அசத்தலான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் ஜெமினி. ஜெமினிக்கு, யாருடனும் சச்சரவுகள் இருந்ததில்லை. ஆனால் சர்ச்சைகளோ ஏராளம். பார்க்கும் பெண்கள் அத்தனை பேரையும் வசீகரிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததுதான் பிரச்னையே. ஜெமினி கணேசன் 1920 ஆம் ஆண்டு…
Read More
எஸ்.ஏ.அசோகன்! நினைவு நாள் சிறப்பு கட்டுரை!

எஸ்.ஏ.அசோகன்! நினைவு நாள் சிறப்பு கட்டுரை!

கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகைக் கலக்கியவர் அசோகன்..எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். இப்பேர் பட்ட அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார். பின்னர் சினிமாவில் நுழைந்த அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். அவ்வையார், மாயமனிதன், வீரத் திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப் பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன். அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். 88 எம்.ஜி.ஆர். படங்களில் அவர் நடித்துள்ளார். ஏ.வி.எம். மற்றும் தேவர் பிலிம்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில் முக்கிய வேடம்…
Read More
கொத்தமங்கலம் சுப்பு!- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

கொத்தமங்கலம் சுப்பு!- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

கவிஞர், சிறந்த எழுத்தாளர், சினிமா கதை வசனகர்த்தா, இயக்குநர் கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்தநாள் இன்று. இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப் பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவன மான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு. அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன்  நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு. கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் தாயாரை இழக்கநேர்ந்ததால் தந்தை மகாலிங்க ஐயரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார் சுப்பு. இயல்பாக கலை விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. மகனை பொறுப்பானவனாக ஆக்க…
Read More
மனம் கவர்ந்த வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா!

மனம் கவர்ந்த வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா!

இப்போதெல்லாம் நாயகியே கவர்ச்சி நடன மங்கை ரோல் பண்ணுவது போல் நாயகனே வில்லன் ரோலும் செய்யும் காலம். ஆனால் 1950களில் வந்த வில்லன்களில் மட்டும் அல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த் திரையில் வந்து போனவர்கள் எவரையும் விட தனி அடையாளம் கொண்டவர் பி எஸ் வீரப்பா. ஜஸ்ட் ஒரு குரூரச் சிரிப்பைக் கூட சகலரும் ரசிக்கும் விதத்தில் மாற்றி காட்டி மனம் கவர்ந்தவர் இந்த வீரப்பா. இவர் குறித்து நம்ம கட்டிங் கண்ணையா வழங்கும் சுவையான தகவல்கள் இதோ: பி. எஸ். வீரப்பாவை ஒரு வில்லனாகத்தான் அவரைப் பல படங்களில் ரசிகர்கள் பார்த்தார்கள் என்றாலும் அன்றைய கதாநாயகர்களுக்கு இணையான உடற்கட்டு, முகவெட்டு கொண்டவர் . அதைவிட முக்கியமானது, அவருடைய தமிழ் உச்சரிப்பு. மிகத் தெளிவாக வசனங்களைப் பேசக்கூடியவர். அதனால்தான் வில்லனாக அவர் பேசிய வசனங்கள்கூட, கதாநாயகர்கள் பேசும் வசனங்களையும் மிஞ்சி மனதிலே நின்றது, நிற்கிறது. இன்றைய ‘பஞ்ச்’ வசனங்களுக்கு…
Read More
இந்திய சினிமாவின் மாமேதை ‘ வி.சாந்தாராம்’!

இந்திய சினிமாவின் மாமேதை ‘ வி.சாந்தாராம்’!

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்தவர் வி. சாந்தாராம். தமிழ் நாட்டில் டைரக்ஷனில் புதுமையைப் புகுத்திய ஸ்ரீதர், கே.பாலசந்தர் உள்பட பல டைரக்டர்களும், வட நாட்டில் உள்ள பல பிரபல டைரக்டர்களும் கூட, சாந்தாராமை தங்கள் வழி காட்டியாகக் கொண்டிருதாங்களாக்கும். அதையெல்லாம் விட குறிப்பாக சொல்லணுமுன்னா ‘‘படங்களை இயக்குவதற்கு என் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் வி.சாந்தாராம்’’ என்று புகழாரம் சூட்டிய எம்.ஜி.ஆர்., அவர் காலில் விழுந்து வணங்கினார் என்றால், சாந்தாராம் எப்படிப்பட்ட மாமனிதராக இருக்க வேண்டும்! மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் ஓர், எளிய குடும்பத்தில் 1901–ம் ஆண்டு நவம்பர் 18–ந் தேதி சாந்தாராம் பிறந்தார். தந்தை பெயர் வன்குந்தரே. தந்தை சமண (ஜெயின்) மதத்தை சேர்ந்தவர். தாய் இந்து. சாந்தாராம் இளைஞராக இருந்தபோது 1918–ம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள ஊப்ளியில் ஒரு சிறிய தொழிற்சாலையில் அடித்தளப்…
Read More
பி.ஆர்.பந்தலு – வெள்ளித்திரையைக் கல்வெட்டாக்கிய ஜாம்பவான்!!

பி.ஆர்.பந்தலு – வெள்ளித்திரையைக் கல்வெட்டாக்கிய ஜாம்பவான்!!

ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப் படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது சென்னையில்தான். பந்தலுவுக்கு சென்னையும் தமிழும் வாழ்வாதாரமாயின. நடிப்பைவிட படத்தயாரிப்பிலும் இயக்கத்திலும் அவருக்கு ஆர்வம் அதிகமானது. 1957ல் வெளியான ‘தங்கமலை ரகசியம்’, பந்தலு தயாரித்து இயக்கிய முதல் படம். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகம் தந்தது. ஸ்கூல் மாஸ்டர், கிருஷ்ணதேவராயா போன்ற படங்களைக் கன்னடத்தில் எடுத்தார். அங்கும் அவருக்குப் பெயர் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் அவரது திறமைகள் வெளிப்பட்டன. சிவாஜியும் சந்திரபாபுவும் நகைச்சுவையால் அதகளம் செய்த ‘சபாஷ் மீனா’ படமும் இவரது இயக்கத்தில் வெளியானதுதான். எனினும், பி.ஆர்.பந்தலுவின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்திய படம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன். காட்சியமைப்புகளாலும் வசனங்களாலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே நம் கண்முன்னே…
Read More