27
Jul
சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப் படத்தை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். ஆம்.. தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. 52 வருடங்கள் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் சித்திரத்திற்கு இணையான ஒரு படம் உருவாகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலாகித்து ட்ரெண்டிங் உருவாக்கி மகிழ்கிறார்கள். இச்சூழலில் இந்த தில்லானா மோகனாம்பாள் குறித்து நம் கட்டிங் கண்ணையா வழங்கும் சிறப்புக் கட்டுரை இதோ: 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா…
