அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில்  ‘பிரமாண்ட நாயகன்  ‘!

அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில் ‘பிரமாண்ட நாயகன் ‘!

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்ட கோடி 'பிரமாண்ட நாயகன்.' ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டது. ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் எனலாம். இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ். பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர். மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். 'பாகுபலி'க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள்…
Read More
என் குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்ய தயாரானேன்! – கமல் பகீர்

என் குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்ய தயாரானேன்! – கமல் பகீர்

பிரபல பத்திரிகை ஒன்றின் இணையதளத்துக்காக தனக்குப் பிடித்த 70 படங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதில் தான் எழுதி, நடித்த 'மகாநதி' படத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதல்முறையாக, அந்தக் கதையை எழுதத்தூண்டிய சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளர். அதில், "எது என்னை 'மகாநதி' எழுதவைத்தது என்பது பற்றி நான் இதுவரை சொன்னதில்லை. இப்போது எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். உலகம் எப்படி என புரிந்துகொண்டிருப்பார்கள். எனவே இப்போது சொல்கிறேன். எனது வீட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து எனது மகளை கடத்தி அதன் மூலம் என்னிடம் மிரட்டி பணம் பெறலாம் என திட்டம் போட்டிருந்தார்கள். ஒரு முறை அதற்கான ஒத்திகையும் நடந்தது. ஆனால் எதேச்சையாக அவர்கள் திட்டத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு கோபம் வந்தது, பதட்டமானேன், எனது குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்யவும் தயாரானேன். ஆனால் சரியான சமயத்தில் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டேன். அப்போது நான் புதிய திரைக்கதை ஒன்றை எழுதவேண்டியிருந்தது.…
Read More
கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

'' 'நாசா' வுக்கு எப்படி ஒரே ஒரு 'வாயேஜர்' விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார் '' எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் '12.12.1950' படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும். இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் நேற்று தங்களது 'வாயேஜர்' விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளி யையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா 'நாசா' விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால…
Read More
7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துப்பறிவாளன்'. அரோல் குரலி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதற்காக இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் "நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பணிகளால் சரியாக படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லை. ஜனவரியில் ஒரு படம், ஏப்ரலில் ஒரு படம் என்று திட்டமிட்டு இருந்தீர்கள். அதுவும் முடியாமல் போய்விட்டது. இதனால் நீங்கள் வாங்கி கடனுக்கு வட்டி அதிகமாக கட்ட வேண்டியதிருக்குமே. இதனால் உங்களுக்கு பெரிய இழப்பு தானே" என்ற கேள்வியை விஷாலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: இந்த இழப்பை எல்லாம் 'சண்டக்கோழி 2' படத்தின் மூலம் மொத்தமாக கூட சரி செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு…
Read More
நிஜ அண்ணன், தம்பி கதையிலும் பிரதர்ஸூகளாக நடிக்கும்  “ திருப்பதிசாமி குடும்பம் “

நிஜ அண்ணன், தம்பி கதையிலும் பிரதர்ஸூகளாக நடிக்கும் “ திருப்பதிசாமி குடும்பம் “

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “. இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்கம் – சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர். படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறிய போது, “சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலியில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்த நான் முதன் முதலாக எனது மகன்களை கதாநாயகர்களாக வைத்து முடித்து U சர்டிபிகேட் வாங்கி சென்சார் குழுவினரால் பாராட்டையும் வாங்கிவிட்டேன். நான் ஏற்கெனவே அரசு, சத்ரபதி என்று இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன். இந்த படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படமாகவும், ஜனரஞ்சகமான படமாகவும்…
Read More
திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

தமிழில் மிக முக்கியமான இரண்டு படங்களான ‘கற்றது தமிழ்’ மற்றும் ‘தங்கமீன்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராமின் 3வது படைப்பு தரமணி. முதல் படத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் நிலையும் அடுத்த படத்தில் இக்கால கல்வி முறையை பற்றியும் காட்டிய இயக்குநர் ராம், தரமணியில் உலகமயமாக்கலால் ஆண்-பெண் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். டீசர் முதல் விளம்பரம் வரை அனைத்தும் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ‘தரமணியின் வழியாக கீழடி வரை’, இயக்குநர் ராம் அளித்த பேட்டி சுருக்கமாக.. ஏன் ‘தரமணி’? வடசென்னை, தென் சென்னை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கு. தரமணிக்கு அந்த பக்கம் புதிய சென்னை ஒன்று இருக்கு. பன்முக கலாச்சாரம் மற்றும் பல மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி தரமணி.…
Read More
வெட்டி ஆபீசர்களை வி. ஐ. பி. – 2 ஆக்கிய தனுஷ் & கோ!

வெட்டி ஆபீசர்களை வி. ஐ. பி. – 2 ஆக்கிய தனுஷ் & கோ!

முன்னொரு காலத்தில் வெட்டி ஆபீசர் என்ற கிண்டலுக்கு ஆளான அததனை யூத்களுக்கு விமோசன்ம வந்து மூன்று வருடமாகிறது, ஆம. வேலையில்லா இளைஞர்கள் இப்போது தங்களை விஐபி என்று கம்பீரமாக சொல்லிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பொதுவாக ஒரு திரைப்படம் மக்களுக்கு பிடிப்பதற்கும், அது ஒரு மாற்றதை தருவதற்குமான வித்தியாசங்கள் எக்கச்சக்கம் உள்ளன. படு கேஷூவலாக லோ பட்ஜெட்டில் தனுஷை தவிர மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாமல் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி மக்கள் மனதில் இடம்பிடிக்கவும், ஒரு தரப்பின் அடையாளமாகவுமே மாறிப்போனதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு !! அதன் மிகப் பெரிய வெற்றிக்கு முதல் காரணம் அதன் திரைக்கதை, வேலையில்லா பட்டதாரி படத்தின் கதை மிகவும் எளிமையான ஒன்று, ஒரு வகையில் அதுவே அதை மக்களிடம் சென்று சேர மிகப்பெரிய கருவியாக இருந்திருக்கிறது எனறுதான் சொல்ல வேண்டும். மூன்று வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு ஹவுஸில் இருக்கும் வேலையில்லாத மிடில் கிளாஸ் இளைஞன், அவன்…
Read More
‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன் நடிக்கும் ‘ மாட்டுக்கு நான் அடிமை!

‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன் நடிக்கும் ‘ மாட்டுக்கு நான் அடிமை!

சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை பெற்று  கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அதைபார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக்கொள்ள கூடாது என திடீரென பட்டம் போட்டுக்கொண்டவர்களையும் பார்த்துவிட்டோம்..ஆனால் சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக்கொண்டு வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரை தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன். இவர் தயாரித்து நடிக்கும் படம் தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம். அந்த கேரக்டரில் தான் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இந்தப்படம் நம்ம நாட்டுல மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆனால் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணவில்லை.. தமிழ்…
Read More
அஜித்தையே கலாய்ச்சவன் நான் – பரோட்டா சூரி மகிழ்ச்சி!

அஜித்தையே கலாய்ச்சவன் நான் – பரோட்டா சூரி மகிழ்ச்சி!

சூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான் ’வெண்ணிலாக் கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். இதனால இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர். இந்த நிலையில் சினிமாவில் தான் அடியெடுத்து வைத்து இருபது வருடம் ஆகிவிட்டதையும் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இதுநாள் வரை இருந்துவரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சூரி பழைய நினைவுகளை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.. அப்போது. லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஜி’ படத்தில் இரண்டு காட்சிகளில் தான் நடித்ததாகவும், அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவரின் அடியாளாக நடித்த சூரி, படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜித்தை…
Read More
விஷால் நடிக்கும் துப்பறிவாளன் கதை என்ன? – மிஷ்கின் மினி பேட்டி!

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் கதை என்ன? – மிஷ்கின் மினி பேட்டி!

நடிகர் சங்க செயலாளரு, தயாரிப்பளர் சங்கத் தலைவருமான விஷால் கைவசம் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, பி.எஸ்.மித்ரனின் ‘இரும்பு திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, வெங்கடே ஷின் ‘நாளை நமதே’, பேரரசு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரெடியாகிக் கொண்டிருக்கிறது. .இதில் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ்வாக வலம் வரவுள்ளாராம். மேலும், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆங்கிலத்தில் வந்த ‘செர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளியான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற நாவல்களின் ஸ்டைலில் இருக்குமாம். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இதற்கு கார்த்திக் வெங்கட்ரா மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சமீபத்தில் படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்…
Read More