மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்டது. சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நைனிகா உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார்கள். சென்னை, கொச்சின், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு இயக்குநர் ரமேஷ் கண்ணா வசனங்கள் எழுதியுள்ளார்.
விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் துவங்கவுள்ளது. செப்டம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் கதையாகும்.
இசை – அம்ரேஷ்
பாடல்கள் – பா விஜய், விவேகா
வசனம் – ரமேஷ் கண்ணா
ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்
எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர்
புரொடக்ஷன் டிசைனர் : மணி சுசித்ரா
ஆர்ட் : ஜோசப் நெல்லிகன்
சண்டை பயிற்சி: பெப்சி விஜயன்
நடனம் : பிருந்தா
நிர்வாகத் தயாரிப்பு : விமல்.ஜி
தயாரிப்பு : எம்.ஹர்சினி
இயக்கம் : சித்திக்
Related posts:
இப்படத்தை நான் கண்டிப்பாக பார்க்க மாட்டேன். ‘அவள்’ நாயகி ஆண்ட்ரியா அதிரடி பேச்சு!October 11, 2017
சுசி கணேசன் ரொம்ப பேட் பாய்தான்! - அமலா பால் ஸ்டேட்மெண்ட்!October 24, 2018
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்‘க/பெ ரணசிங்கம்’!June 12, 2019
டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த நாளின்றுMarch 24, 2018
தாமதமாகும் கார்த்தியின் 'ஜப்பான்' படம்April 25, 2023