இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

வெற்றியடைந்த படங்களை விட மிக மோசமாக தோல்வியடைந்த படங்கள் தான் நமக்கு பெரிய படிப்பினைகளை தரும் என்பார்கள் சினிமா ஜீனியஸ்கள். அப்படி நமக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நிறைய படிப்பினைகளை இந்த ஆண்டு வாரி வழங்கிய படங்கள் இவை.. சாகசம் பிரஷாந்தையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கே வருவதில்லை. ஆனாலும் அவர் நடித்த ஒரு படம் ஏகப்பட்ட பில்டப்களுடன் இந்த ஆண்டு வெளியானது. வெளியான பின்னர் தான் அது ஒரு ஹிட் அடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் என தெரிய வந்தது. அம்புட்டு ரகசியமா வெச்சிருந்தாங்களாம்… அந்த ஹிட் படம் எடுத்த டைரக்டர் மட்டும் இந்த ரீமேக்கை பார்த்திருந்தால் கண்ணீர் விட்டு அழுதிருப்பார். அந்த அளவுக்கு படத்தை நாசமாக்கி இருந்தார்கள். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரிஜினல் படத்திலிருந்த சில காட்சிகளை அப்படியே வெட்டி இதில் சேர்த்தும் இருந்தார்கள். வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து காண்டாமிருகம் என்று பேர் வைத்த கதையை தன் மகனுக்கே செய்து அழகு பார்த்திருந்தார்…
Read More
வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதில் கண்டிப்பாக சுயலாபம் இருக்கும். தமிழ் கலாசாரத்தை வலியுறுத்தும், தமிழில் டைட்டில் வைக்கப்படும், சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெறும் படங்களுக்கு வரிவிலக்கு என்று அரசு அறிவித்திருக்கிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகும் தொடர்கிறது. ஆனால் சமீபகாலமாக இந்த எந்த கண்டிஷனிலும் வராத படங்களெல்லாம் வரிவிலக்கு பெற்று விடுகின்றன. எப்படி என்று விசாரித்தால் பகீர் உண்மைகள் வெளிவருகின்றன. முதல் கண்டிஷன் தமிழில் பெயர் வைப்பது… இது நடைமுறையிலேயே இல்லை. தமிழில் பெயர் வைக்கப்பட்ட உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டதை நாம் அறிவோம். ரெமோ போன்ற ஆங்கில டைட்டில் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கிறது. அடுத்து யு சர்டிஃபிகேட்… இங்கே யு சர்டிஃபிகேட் வாங்கி வரிவிலக்கு பெற்ற படங்கள் வெளிநாடுகளில் யு/ஏ சர்டிஃபிகேட் பெறுகிறது. தமிழ் சென்சாரின் லட்சணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நாம் விசாரித்த வரை முழுக்க முழுக்க கட்டிங்கே வரிவிலக்கை…
Read More
வைகை எக்ஸ்பிரஸ் : அடுத்த மாத வெளியீடு

வைகை எக்ஸ்பிரஸ் : அடுத்த மாத வெளியீடு

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ். அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே. மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க 'தண்ணில கண்டம்' படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது. இன்று வரை தொலைக்காட்சிகளில் ஆர் கே வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களில் இருந்து அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி வெற்றி பெற்ற கூட்டணியாக வலம் வந்தது.…
Read More
நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

தன்னுடைய மனதை மயக்கும் இசையால், தமிழ் திரையுலகிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருபவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தரமான கதைக்களங்களை தேர்வு செய்து, அந்த கதைக்களத்திற்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுக்கும் ஜிப்ரான், தற்போது நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் 'அறம்' திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி, 'கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்து வரும் 'அறம்' திரைப்படம், வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக விளங்கி கொண்டிருப்பது, தண்ணீர் பஞ்சம் தான். அத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும் போது, நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின் பங்கும் பெரியளவில் இருக்கும். எங்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய கூடிய அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நாங்கள் யோசிக்கும் பொழுது, எங்கள் அனைவரின்…
Read More