விஜயகாந்த் மகனை வைத்து ‘மதுரை வீரன்’ – ஏன்? – இயக்குநர் விளக்கம்!

விஜயகாந்த் மகனை வைத்து ‘மதுரை வீரன்’ – ஏன்? – இயக்குநர் விளக்கம்!

தேமுதிக தலைவரான விஜயகாந்த  வாரிசு சண்முகப்பாண்டியன் நடிக்கும் படமான ‘மதுர வீரன்’ டீசர்  அண்மையில்தான் வெளியானது. இது ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின் காட்சிகளில் இருந்து ஆரம்பமாகி, மதுரை வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியினோடு அதில் பங்குபெறும் மனிதர்களைப் பற்றி சொல்லிச் செல்கிறது. ‘அவங்க அழிக்கணும் நினைக்கிறது ஜல்லிக்கட்டை மட்டும் இல்ல... நம்மளோட கலாசாரத்தை’ என சமுத்திரக்கனியின் குரல் பின்னணியுடன்  தொடங்கும் இந்த டீசர், படம் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தைப் பற்றியதோ என்ற கேள்வியையும் ஏற்படுத்தியது. ஆனால், படத்தின் இயக்குநர் பி.ஜி.முத்தையா, ‘இத்திரைப்படம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை பற்றியதோ பீட்டாவுக்கு எதிராக எடுக்கப்பட்டதோ அல்ல; இது முழுக்க ஜல்லிக்கட்டைப் பற்றியது’ என்று விவரிக்கிறார்.. அறிமுக இயக்குநரான முத்தையா, ‘நம்ம படம்  இந்த வீர விளையாட்டின் பல்வேறு சிக்கல்களை யும் உள் அரசியலையும் விவரிக்கிறது’ என்று அண்மையில் அளித்த ஒரு  பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ‘ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி…
Read More
GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு  பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சினிமா வுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். இன்றைய இளைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப் பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி சென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் "பிக் சினி எக்ஸ்போ " கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
Read More
ஆணுக்கு ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பும் படம்!

ஆணுக்கு ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பும் படம்!

இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும். ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ‘தரமணி’ இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும். இது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில் ,”`குழந்தைகளை மையமாக வைத்துப் படம் எடுத்த இயக்குநரிடமிருந்து ‘ஏ’ சான்றிதழ் படமா?. என்ன ஆச்சு இந்த இயக்குநர் ராமுக்கு?’ என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் ஆகவில்லை. சொல்லப் போனால், இந்த 10 ஆண்டுகளில் ராம் எனும் கலைஞன் அதிகமாக நெகிழ்ந்திருக்கிறான். பொதுப்புத்தியில் ‘ஏ’ படம் குறித்து என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் படம் ஆண்-பெண் உறவுச்சிக்கலைப்…
Read More
கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

கமல்+ரஜனி ரசிகன் நான்!- பார்த்திபன் ஸ்டேட்மென்ட்!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன்  ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர்.  இதையொட்டி, நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நடிகர் பார்த்திபனிடம்,‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்று  கேட்டனர். அதற்கு பார்த்திபன் அவர் பாணியிலேயே “கமல் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டால் அவரிடமே வருகிறீர்களா, இல்லையா எனக் கேட்டு சொல்லிவிடுவேன். ரஜினியை பொறுத்தவரை அவர் ஆண்டவனை கேட்டுத்தான் சொல்வேன் என்பார். எனக்கு…
Read More
நிவேதா பெத்துராஜ் பெருமை!

நிவேதா பெத்துராஜ் பெருமை!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன் ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர். இந்நிலையில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், இரண்டாவது படத்திலேயே மெகா கூட்டணியுடன் கிராமத்து ரோலில் களமிறங்குகிறார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நிவேதா பெத்துராஜ், “இது…
Read More
வி ஐ பி 2 -வுக்கு  மலேசியாவில் மலைக்க வைக்கும் வரவேற்பு!

வி ஐ பி 2 -வுக்கு மலேசியாவில் மலைக்க வைக்கும் வரவேற்பு!

இந்த ஆகஸ்ட் 11-ம் தேதி `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்க பட்டுள்ளது. அதே போல் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’, சிபிராஜின் `சத்யா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று செய்திகள் வந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாக வில்லை. இந்த ஆகஸ்ட் 11 ரேசில் இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படமும் இணைந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக திரைய ரங்குகளை விஐபி 2 கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மலேசியாவிலும் `வேலை யில்லா பட்டதாரி-2′ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்திருக்கிறது. மலேசியாவில் மட்டும் 108 திரையரங்குகளில் 550 திரைகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மலேசியாவில் வேறு எந்த நடிகரின் படத்துக்கும் இவ்வுளவு திரைகள் கிடைத்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மலேசியாவிலும் தனுஷ்…
Read More
‘கீ’ -ன்னா என்ன அர்த்தம்?

‘கீ’ -ன்னா என்ன அர்த்தம்?

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை நிக்கி கல்ராணி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘கீ’. அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கும் இந்த படத்தில் கல்லூரி மாணவனான ஜீவா ஹேக்கிங் செயலில் ஈடுபடுபவராக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது  ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னல் (ஆகஸ்ட் 3) வெளியிட்டார். இந்த ‘கீ’ திரைப்படம் குறித்து காலீஸ் விவரித்த போது, “இந்த படம் குறித்து ஜீவாவிடம் கூறிய உடனே சம்மதித்தார். அவர் தொழில்நுட்பம் குறித்து நிறைய தகவல்களை அறிந்து வைத்துள்ளார். மூன்று ஹார்டு டிஸ்க்குகள் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் ஹேக்கிங் பற்றியுமான ஆவணப்படங்களை சேகரித்துள்ளார். படப்பிடிப்பின் போது அவர் கூறும் தகவல்கள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. படத்தின் தலைப்பான ‘கீ’ தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப்பட்டது. கீ என்றால் ஒவ்வொரு செயலும் சந்தர்ப்பமும் நல்லது, கெட்டது என்ற இரு புறங்களைக் கொண்டது…
Read More
பிஸ்தா இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘தரன்’!

பிஸ்தா இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘தரன்’!

நூற்றுக்கணக்கில் வரும் இளம் இசை  அமைப்பாளர்கள் , ஏற்கனவே இங்கு  நிலைத்து இருக்கும் பிரபல இசை அமைப்பாளர்கள் ஆகியோர் இடையே தாக்கு பிடித்து சில ஆண்டுகளிலே 25 படங்கள் பணி புரிந்து சாதனை செய்வது சுலபமல்ல. அந்த வகையில் குறைந்த காலத்தில் 25 படங்களுக்கு இசை அமைத்த பெருமையை இளம் இசை அமைப்பாளர் தரன்  "பிஸ்தா" படம் மூலம் அடைகிறார். பல்வேறு ஹிட் பாடல்களை வழங்கிய தரன் பிரபல மாடல் தீக்ஷிதாவுடன் விரைவில் திருமண பந்தம் மூலம் இணையவிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில், "மெட்ரோ" சிரிஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக மிருதுளா முரளி நடிக்க இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் பாஹாத்  பாசில் உடன் நடித்த படம் பெரும் வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அருந்ததி நாயர், சதீஷ்,நமோ நாராயணா, யோகி பாபு, சென்டராயன், மற்றும் சுவாமிநாதன், நடிக்கும் இந்த படத்தை…
Read More
’ நிபுணன்’ படத்தில் நடிச்ச அனுபவம்! – ஸ்ருதி ஹரிஹரன் மகிழ்ச்சி!

’ நிபுணன்’ படத்தில் நடிச்ச அனுபவம்! – ஸ்ருதி ஹரிஹரன் மகிழ்ச்சி!

மக்களால் ஏற்கப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் அதில் பணிபுரிந்த நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பல வாய்ப்புகளை பெற்று தரும். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' படத்தில் அவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பாராட்டு பெற்றுள்ளனர். அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன். 'நிபுணன்' குறித்து ஸ்ருதி ஹரிஹரன் பேசுகையில், '''நிபுணன்' படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு 'நிபுணன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியை கண்டதில் எனக்கு பெருமை. இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான மனைவியாக, அவருக்கு நேரிடும் தொழில் சார்ந்த நெருக்கடிகளையும் உடல்நலம் சார்ந்த திடீர் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும்…
Read More